யாழ் மண்ணில் அநுரகுமார காலடி வைக்க முடியாது எனதமிழரசு கட்சியின் பொதுசெயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
வடபகுதியில் தமிழர் நிலங்களை சத்தம் சந்தடியின்றி கபளீகரம் செய்யும் செயற்பாட்டை அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அறைகூவல் விடுத்துள்ளார்.
அத்துடன் அவ்வாறு கையகப்படுத்திய நிலங்களை உடனடியாக விடுவிப்பதோடு, அது தொடர்பாக வெளியிட்ட வர்த்தமானியையும் மீளப்பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அவ்வாறு தமிழர் நிலங்களை விடுவிக்கவில்லை என்றால் அநுரகுமாரவை வடபகுதிக்கு வரவிடமாட்டோம் என கூறியதோடு, யாழ் மண்ணில் ஒருபோதும் காலடி வைக்க முடியாது எனவும் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற மேதின கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தம்மை ஏமாளிகள் என நினைத்து இவ்வாறான காரியங்களை மேற்கொள்வதனாலேயே தாம் இவ்வாறு எச்சரிக்கை விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐம்பத்திரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்ற கோட்டாபய ராஜபக்ஷவே சிங்கள மக்களால் விரட்டி அடிக்கப்பட்டார். ஆனால் வெறும் நாற்பத்திரண்டு வீத வாக்குகளைப் பெற்ற அநுரவின் கதி என்னவாகும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
அதேவேளை அநுரகுமார திஸாநாயக்க தனது வழியை சரிசெய்யாது விட்டால் அதைவிடவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேடைகளில் மக்களின் காணிகளை விடுவிப்போம் எனக் கூறிக்கொண்டு சத்தம்சந்தடியின்றி மக்களின் 5940 ஏக்கர் காணிகளை கபளீகரம் செய்து மார்ச் மாதம் 28 ஆம் திகதி வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது எனவும் கடுமையாக சாடியுள்ளார்.
இந்த அரசாங்கம் நில விடுவிப்பு என்று கூறிக்கொண்டு மேலும் மேலும் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அடுத்து இந்த அரசாங்கம் விலைவாசியை குறைக்கிறோம் எனக்கூறிக்கொண்டு மேலும் விலைகளை அதிகரித்துக்கொடே செல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது சீனியை விடவும் உப்பின் விலை அதிகரித்துள்ளதாகவும் ரஜ லுனு எனும் பெயரில் ஆனையிறவு உப்பளத்தை ஆரம்பித்து அரத சரியான முறையில் செயற்படுத்தாதுஉப்பில் சுவையா பெயரா முக்கியம் என அமைச்சர் கேள்வியெழுப்புகிறார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை தேர்தல் காலங்களில் பிரசார மேடைகளில் மொழி முக்கியம் தமிழ் மக்களின் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என கூறிய அநுர இப்போது ஆனையிறவு உப்பிற்கு ரஜ லுணு என்ற பெயரை பயன்படுத்துகிறார் எனவும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ் மண்ணில் அநுர காலடி வைக்க முடியாது என சுமந்திரன் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை யாழ் மண்ணில் அநுரகுமார காலடி வைக்க முடியாது எனதமிழரசு கட்சியின் பொதுசெயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கடுமையாக எச்சரித்துள்ளார்.வடபகுதியில் தமிழர் நிலங்களை சத்தம் சந்தடியின்றி கபளீகரம் செய்யும் செயற்பாட்டை அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அறைகூவல் விடுத்துள்ளார்.அத்துடன் அவ்வாறு கையகப்படுத்திய நிலங்களை உடனடியாக விடுவிப்பதோடு, அது தொடர்பாக வெளியிட்ட வர்த்தமானியையும் மீளப்பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.அவ்வாறு தமிழர் நிலங்களை விடுவிக்கவில்லை என்றால் அநுரகுமாரவை வடபகுதிக்கு வரவிடமாட்டோம் என கூறியதோடு, யாழ் மண்ணில் ஒருபோதும் காலடி வைக்க முடியாது எனவும் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற மேதின கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தம்மை ஏமாளிகள் என நினைத்து இவ்வாறான காரியங்களை மேற்கொள்வதனாலேயே தாம் இவ்வாறு எச்சரிக்கை விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.ஐம்பத்திரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்ற கோட்டாபய ராஜபக்ஷவே சிங்கள மக்களால் விரட்டி அடிக்கப்பட்டார். ஆனால் வெறும் நாற்பத்திரண்டு வீத வாக்குகளைப் பெற்ற அநுரவின் கதி என்னவாகும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.அதேவேளை அநுரகுமார திஸாநாயக்க தனது வழியை சரிசெய்யாது விட்டால் அதைவிடவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.மேடைகளில் மக்களின் காணிகளை விடுவிப்போம் எனக் கூறிக்கொண்டு சத்தம்சந்தடியின்றி மக்களின் 5940 ஏக்கர் காணிகளை கபளீகரம் செய்து மார்ச் மாதம் 28 ஆம் திகதி வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது எனவும் கடுமையாக சாடியுள்ளார்.இந்த அரசாங்கம் நில விடுவிப்பு என்று கூறிக்கொண்டு மேலும் மேலும் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.அடுத்து இந்த அரசாங்கம் விலைவாசியை குறைக்கிறோம் எனக்கூறிக்கொண்டு மேலும் விலைகளை அதிகரித்துக்கொடே செல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.தற்போது சீனியை விடவும் உப்பின் விலை அதிகரித்துள்ளதாகவும் ரஜ லுனு எனும் பெயரில் ஆனையிறவு உப்பளத்தை ஆரம்பித்து அரத சரியான முறையில் செயற்படுத்தாதுஉப்பில் சுவையா பெயரா முக்கியம் என அமைச்சர் கேள்வியெழுப்புகிறார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.அதேவேளை தேர்தல் காலங்களில் பிரசார மேடைகளில் மொழி முக்கியம் தமிழ் மக்களின் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என கூறிய அநுர இப்போது ஆனையிறவு உப்பிற்கு ரஜ லுணு என்ற பெயரை பயன்படுத்துகிறார் எனவும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.