கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளுமென்டல் வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.