• Nov 15 2025

தலாவ பகுதியில் மற்றுமொரு விபத்து!

shanuja / Nov 14th 2025, 11:37 am
image

தலாவ சுனாமி சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும், மோட்டார் வாகனமும் மோதிய விபத்தில் காயமடைந்த இருவர் தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கவலைக்கிடமான நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது. 


அநுராதபுரம் திசையிலிருந்து தலாவ நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம் திடீரென பிரதான வீதியில் வைத்து மீண்டும் அனுராதபுரம் நோக்கி 'யு-டர்ன் எடுத்தபோது, ​​பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. 


மோட்டார் வாகனத்தை செலுத்தி வந்த ஆசிரியையும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இந்த விபத்து தொடர்பில் தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலாவ பகுதியில் மற்றுமொரு விபத்து தலாவ சுனாமி சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும், மோட்டார் வாகனமும் மோதிய விபத்தில் காயமடைந்த இருவர் தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கவலைக்கிடமான நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது. அநுராதபுரம் திசையிலிருந்து தலாவ நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம் திடீரென பிரதான வீதியில் வைத்து மீண்டும் அனுராதபுரம் நோக்கி 'யு-டர்ன் எடுத்தபோது, ​​பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் வாகனத்தை செலுத்தி வந்த ஆசிரியையும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement