• Nov 05 2026

பாடசாலைக்குச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம் – இன்று காலை பெரும் பதற்றம்

Chithra / Nov 2nd 2026, 10:59 am
image


தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றுக்கு அருகில் குளவிக் கூடுகள் கலைந்து தாக்கியதில், மூன்று மாணவர்கள் பாதிக்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த சம்பவம் இன்று (02) காலை 7.30 மணியளவில் தலவாக்கலை ட்ரூப் தோட்டத்திற்கு அருகிலுள்ள பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.


பாடசாலைக்குச் செல்வதற்காக மாணவர்கள் வருகை தந்து கொண்டிருந்த வேளையில், வீதியோரத்தில் அமைந்திருந்த குளவிக் கூடுகள் கலைந்து மாணவர்களைத் தாக்கியுள்ளன.


இதனையடுத்து பாதிக்கப்பட்ட மூன்று மாணவர்களும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் (Emergency Care Unit) சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


குறித்த பகுதியில் நீண்டகாலமாக குளவிக் கூடுகள் காணப்படுவதுடன், அண்மைக்காலமாக அவை கலைந்து மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களைத் தாக்கும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.


எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு ஆபத்தான குளவிக் கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாடசாலைக்குச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம் – இன்று காலை பெரும் பதற்றம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றுக்கு அருகில் குளவிக் கூடுகள் கலைந்து தாக்கியதில், மூன்று மாணவர்கள் பாதிக்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் இன்று (02) காலை 7.30 மணியளவில் தலவாக்கலை ட்ரூப் தோட்டத்திற்கு அருகிலுள்ள பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.பாடசாலைக்குச் செல்வதற்காக மாணவர்கள் வருகை தந்து கொண்டிருந்த வேளையில், வீதியோரத்தில் அமைந்திருந்த குளவிக் கூடுகள் கலைந்து மாணவர்களைத் தாக்கியுள்ளன.இதனையடுத்து பாதிக்கப்பட்ட மூன்று மாணவர்களும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் (Emergency Care Unit) சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.குறித்த பகுதியில் நீண்டகாலமாக குளவிக் கூடுகள் காணப்படுவதுடன், அண்மைக்காலமாக அவை கலைந்து மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களைத் தாக்கும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு ஆபத்தான குளவிக் கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement