• Dec 11 2024

அம்பாறை மாவட்டத்தில் சுதந்திரமான : தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது

Tharmini / Nov 14th 2024, 10:41 am
image

அம்பாறை மாவட்டத்தில் இன்று (14) பொதுத்தேர்தலானது சுதந்திரமாக இடம்பெற்று வருகின்றது.

இன்று (14) காலை 07 மணிமுதல் மக்கள் மிக ஆர்வமாக  வாக்களிப்பதனை காண முடிந்தது.

வாக்களிப்பு நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பு குழுவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் , அம்பாறை , சம்மாந்துறை, கல்முனை ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளை சேர்ந்த 528 வாக்களிப்பு நிலையங்கள் காணப்படுகின்றன.

21 அரசியல் கட்சிகளை சேர்ந்த 210 பேரும் 43 சுயேட்சை குழுக்களை சேர்ந்த 430 பேரும் உள்ளடங்கலாக 640 வேட்பாளர்கள் அம்பாறை மாவட்டத்தில் 07 ஆசனங்களுக்காக போட்டினயிருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாக்கெண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் இன்று(14) மாலை 04 மணியுடன் வாக்களிப்பு நிறைவு பெற்றதன், பின்னர் அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்பவியல் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்

68 வாக்கெண்ணும் நிலையங்கள் ஊடாக வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெறவுள்ளதாக ம் அம்பாறை மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.





அம்பாறை மாவட்டத்தில் சுதந்திரமான : தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது அம்பாறை மாவட்டத்தில் இன்று (14) பொதுத்தேர்தலானது சுதந்திரமாக இடம்பெற்று வருகின்றது.இன்று (14) காலை 07 மணிமுதல் மக்கள் மிக ஆர்வமாக  வாக்களிப்பதனை காண முடிந்தது.வாக்களிப்பு நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பு குழுவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் , அம்பாறை , சம்மாந்துறை, கல்முனை ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளை சேர்ந்த 528 வாக்களிப்பு நிலையங்கள் காணப்படுகின்றன.21 அரசியல் கட்சிகளை சேர்ந்த 210 பேரும் 43 சுயேட்சை குழுக்களை சேர்ந்த 430 பேரும் உள்ளடங்கலாக 640 வேட்பாளர்கள் அம்பாறை மாவட்டத்தில் 07 ஆசனங்களுக்காக போட்டினயிருகின்றமை குறிப்பிடத்தக்கது.வாக்கெண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் இன்று(14) மாலை 04 மணியுடன் வாக்களிப்பு நிறைவு பெற்றதன், பின்னர் அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்பவியல் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்68 வாக்கெண்ணும் நிலையங்கள் ஊடாக வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெறவுள்ளதாக ம் அம்பாறை மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement