• Aug 28 2025

300,000 ரூபா லஞ்சம் வாங்கிய விவசாய அதிகாரிகள் கைது!

shanuja / Aug 27th 2025, 11:00 am
image

விவசாயி ஒருவரிடம் 300,000 ரூபா லஞ்சம் வாங்கிய விவசாய அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  


விவசாய சேவைகள் மையத்தின் மேம்பாட்டு அதிகாரி மற்றும் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி அதிகாரி ஆகியோரே இவ்வாறு  லஞ்ச ஒழிப்பு ஆணையகத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


ஜா-எலவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஓகஸ்ட் 15 ஆம் திகதி விவசாய சேவைகள் மைய அலுவலகத்தில் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது.


நபர் ஒருவருக்குச்  சொந்தமான ஒரு வயலை நெல் அல்லாத நிலமாகப் பெயரிடவும், அதிகாரபூர்வ பெயர் கிடைக்கும் வரை அந்த நிலம் நெல் அல்லாத நிலமாகக் கருதப்படும் என்பதை உறுதிப்படுத்தும் கடிதத்தை வழங்கவும்  300,000 ரூபா லஞ்சம் கேட்டுள்ளனர்.


இது தொடர்பாக குறித்த நபர் லஞ்ச ஒழிப்பு ஆணையகத்திற்கு முறைப்பாடு பதிவு செய்ததையடுத்து  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மாரவில நீதவான் நீதிமன்றத்தில்  முற்படுத்திய போது  செப்டெம்பர் 02 ஆம் திகதி வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

300,000 ரூபா லஞ்சம் வாங்கிய விவசாய அதிகாரிகள் கைது விவசாயி ஒருவரிடம் 300,000 ரூபா லஞ்சம் வாங்கிய விவசாய அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  விவசாய சேவைகள் மையத்தின் மேம்பாட்டு அதிகாரி மற்றும் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி அதிகாரி ஆகியோரே இவ்வாறு  லஞ்ச ஒழிப்பு ஆணையகத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜா-எலவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஓகஸ்ட் 15 ஆம் திகதி விவசாய சேவைகள் மைய அலுவலகத்தில் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது.நபர் ஒருவருக்குச்  சொந்தமான ஒரு வயலை நெல் அல்லாத நிலமாகப் பெயரிடவும், அதிகாரபூர்வ பெயர் கிடைக்கும் வரை அந்த நிலம் நெல் அல்லாத நிலமாகக் கருதப்படும் என்பதை உறுதிப்படுத்தும் கடிதத்தை வழங்கவும்  300,000 ரூபா லஞ்சம் கேட்டுள்ளனர்.இது தொடர்பாக குறித்த நபர் லஞ்ச ஒழிப்பு ஆணையகத்திற்கு முறைப்பாடு பதிவு செய்ததையடுத்து  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மாரவில நீதவான் நீதிமன்றத்தில்  முற்படுத்திய போது  செப்டெம்பர் 02 ஆம் திகதி வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement