• Apr 27 2026

ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் போர்; 130 தலிபான்கள் பலி!

Ziya / Feb 27th 2026, 5:21 pm
image

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையில், பாகிஸ்தான் நேற்று (26) இரவு தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.


இதில் 130-க்கும் மேற்பட்ட தலிபான் போராளிகள் உயிரிழந்துள்ளதை பாகிஸ்தான் உறுதிப்படுத்தியுள்ளது. 


'கசப் லில் ஹக்' (Ghazab lil Haq) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் கீழ், பாகிஸ்தான் விமானப்படை காபூலில் உள்ள தலிபான் இராணுவத் தலைமையகம் உட்பட பல இடங்களின் மீது குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியிருந்தது. 


குறித்த நடவடிக்கையின் தற்போதைய நிலை குறித்து விளக்கிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கான் தலிபான் அமைப்பின் ஆக்கிரமிப்பிற்கு தமது ஆயுதப்படையினர் கடும் பதிலடி கொடுத்து வருவதாகத் தெரிவித்தார். 


அதன்படி, குறைந்தது 133 தலிபான் உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதுடன், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் போர்; 130 தலிபான்கள் பலி ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையில், பாகிஸ்தான் நேற்று (26) இரவு தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.இதில் 130-க்கும் மேற்பட்ட தலிபான் போராளிகள் உயிரிழந்துள்ளதை பாகிஸ்தான் உறுதிப்படுத்தியுள்ளது. 'கசப் லில் ஹக்' (Ghazab lil Haq) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் கீழ், பாகிஸ்தான் விமானப்படை காபூலில் உள்ள தலிபான் இராணுவத் தலைமையகம் உட்பட பல இடங்களின் மீது குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியிருந்தது. குறித்த நடவடிக்கையின் தற்போதைய நிலை குறித்து விளக்கிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கான் தலிபான் அமைப்பின் ஆக்கிரமிப்பிற்கு தமது ஆயுதப்படையினர் கடும் பதிலடி கொடுத்து வருவதாகத் தெரிவித்தார். அதன்படி, குறைந்தது 133 தலிபான் உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதுடன், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement