• Jul 28 2026

இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பில் அரசியல் தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் விஜித உறுதி

Chithra / Jul 28th 2026, 9:51 am
image


காலம் காலமாக பல்வேறு இடைத்தரகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீட்டுக்கு உட்பட்டிருந்த இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை, அவற்றிலிருந்து விடுவித்து எவ்வித தலையீடுகளுமின்றி முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை ஊழலற்ற துறையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளில் வேலைவாய்ப்புக்காகப் புறப்படவுள்ள 164 இலங்கையர்களுக்கு விமானப் பற்றுச்சீட்டுகள் வழங்கும் நிகழ்வு நேற்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


முன்னதாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் அரசியல் மற்றும் நிறுவன அதிகாரிகளின் தலையீடு ஓரளவு காணப்பட்டதாகக் குறிப்பிட்டார்.


எனினும், தற்போது இந்நடவடிக்கைகள் மிகவும் திட்டமிட்ட முறையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படுவதாகவும், இது மக்கள் எதிர்பார்த்த மாற்றம் எனவும் அவர் தெரிவித்தார். இந்த மாற்றத்தை அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.


இஸ்ரேலிய கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்புக்காக 3,700 பேரைக் கொண்ட காத்திருப்புப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து 164 பேர் பீபா நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


இந்த வருடத்துக்குள் இதுவரை இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்காக 2,500 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும், சுமார் 6,500 பேருக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், புதிய துறையொன்றில் மேலும் சுமார் 1,000 வேலைவாய்ப்புகள் கிடைக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பில் அரசியல் தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் விஜித உறுதி காலம் காலமாக பல்வேறு இடைத்தரகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீட்டுக்கு உட்பட்டிருந்த இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை, அவற்றிலிருந்து விடுவித்து எவ்வித தலையீடுகளுமின்றி முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை ஊழலற்ற துறையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளில் வேலைவாய்ப்புக்காகப் புறப்படவுள்ள 164 இலங்கையர்களுக்கு விமானப் பற்றுச்சீட்டுகள் வழங்கும் நிகழ்வு நேற்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.முன்னதாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் அரசியல் மற்றும் நிறுவன அதிகாரிகளின் தலையீடு ஓரளவு காணப்பட்டதாகக் குறிப்பிட்டார்.எனினும், தற்போது இந்நடவடிக்கைகள் மிகவும் திட்டமிட்ட முறையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படுவதாகவும், இது மக்கள் எதிர்பார்த்த மாற்றம் எனவும் அவர் தெரிவித்தார். இந்த மாற்றத்தை அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.இஸ்ரேலிய கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்புக்காக 3,700 பேரைக் கொண்ட காத்திருப்புப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து 164 பேர் பீபா நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.இந்த வருடத்துக்குள் இதுவரை இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்காக 2,500 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், சுமார் 6,500 பேருக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், புதிய துறையொன்றில் மேலும் சுமார் 1,000 வேலைவாய்ப்புகள் கிடைக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement