• Jul 29 2026

ஜப்பானில் பேரழிவு; நிலநடுக்கத்தில் சிக்கிய 13 பேர் பலி

Chithra / Jul 29th 2026, 10:53 am
image

 


தென்மேற்கு ஜப்பானைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 10க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள கியூசு தீவின் குமமோட்டோ மாகாணத்தில் ரிக்டர் அளவில் 7.1 ஆகப் 

பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


நிலநடுக்கத்தின் தீவிரத்தால் வணிக வளாகங்கள், கட்டிடங்கள் பகுதியளவு இடிந்து விழுந்து தீப்பற்றியுள்ளன. இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. 


மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க குமமோட்டோ கோட்டையின் சுவர்கள், நெடுஞ்சாலைப் பாலம் மற்றும் காகிதத் தொழிற்சாலை ஆகியவையும் சேதமடைந்துள்ளன.


மருத்துவமனை மற்றும் அதிவேக ரயிலில் இருந்த பயணிகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கியூசு மின்சார நிறுவனத்தின் கீழ் வரும் சுமார் 40,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. 


கைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அவசரகால மின் உற்பத்தியில் ஏற்பட்ட பழுது காரணமாக ஹிகாவா நகர மண்டபம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்கள் இருளில் மூழ்கியுள்ளன.


பாதுகாப்பு கருதி அதிவேக ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. குமமோட்டோ விமான நிலையத்தின் ஓடுபாதைகள் மூடப்பட்டுள்ளன.


முன்னணி நிறுவனங்களான TSMC, Sony மற்றும் Fujifilm ஆகியவை முன்னெச்சரிக்கையாகத் தங்கள் 

ஊழியர்களைத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றியுள்ளன.அப்பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அரசு உறுதிப்படுத்தியுள்ளது.ஆரம்பத்தில் 1 மீட்டர் உயரத்திற்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை பின்னர் திரும்பப் பெறப்பட்டது.


அடுத்த ஒரு வாரத்திற்கு மேலும் சக்திவாய்ந்த நில அதிர்வுகளும் மண்சரிவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) அறிவுறுத்தியுள்ளது.

ஜப்பானில் பேரழிவு; நிலநடுக்கத்தில் சிக்கிய 13 பேர் பலி  தென்மேற்கு ஜப்பானைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 10க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள கியூசு தீவின் குமமோட்டோ மாகாணத்தில் ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.நிலநடுக்கத்தின் தீவிரத்தால் வணிக வளாகங்கள், கட்டிடங்கள் பகுதியளவு இடிந்து விழுந்து தீப்பற்றியுள்ளன. இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க குமமோட்டோ கோட்டையின் சுவர்கள், நெடுஞ்சாலைப் பாலம் மற்றும் காகிதத் தொழிற்சாலை ஆகியவையும் சேதமடைந்துள்ளன.மருத்துவமனை மற்றும் அதிவேக ரயிலில் இருந்த பயணிகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கியூசு மின்சார நிறுவனத்தின் கீழ் வரும் சுமார் 40,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. கைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அவசரகால மின் உற்பத்தியில் ஏற்பட்ட பழுது காரணமாக ஹிகாவா நகர மண்டபம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்கள் இருளில் மூழ்கியுள்ளன.பாதுகாப்பு கருதி அதிவேக ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. குமமோட்டோ விமான நிலையத்தின் ஓடுபாதைகள் மூடப்பட்டுள்ளன.முன்னணி நிறுவனங்களான TSMC, Sony மற்றும் Fujifilm ஆகியவை முன்னெச்சரிக்கையாகத் தங்கள் ஊழியர்களைத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றியுள்ளன.அப்பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அரசு உறுதிப்படுத்தியுள்ளது.ஆரம்பத்தில் 1 மீட்டர் உயரத்திற்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை பின்னர் திரும்பப் பெறப்பட்டது.அடுத்த ஒரு வாரத்திற்கு மேலும் சக்திவாய்ந்த நில அதிர்வுகளும் மண்சரிவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement