கொழும்பு - தலங்கமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டாவை - பொறள்ளை வீதியில் தலவத்துகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பொறள்ளையிலிருந்து கொட்டாவை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வீதியில் பயணித்த வயோதிபப் பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த வயோதிபப் பெண் கொஸ்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கண்டி - கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய வயோதிபப் பெண் ஆவார்.
இந்நிலையில் மாவனல்லை - ரம்புக்கனை பகுதியில், பட்டவல மகா வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்தின் போது, உழவு இயந்திரத்தில் இருந்த மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்திசையில் பயணித்த வாகனங்களின் ஒளி காரணமாக, டிப்பர் வாகனத்தின் சாரதி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை சரியாக கவனிக்காததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற விபத்துக்கள்; வயோதிபப் பெண் பலி மூவர் காயம் கொழும்பு - தலங்கமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டாவை - பொறள்ளை வீதியில் தலவத்துகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.பொறள்ளையிலிருந்து கொட்டாவை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வீதியில் பயணித்த வயோதிபப் பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த வயோதிபப் பெண் கொஸ்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் கண்டி - கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய வயோதிபப் பெண் ஆவார்.இந்நிலையில் மாவனல்லை - ரம்புக்கனை பகுதியில், பட்டவல மகா வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. விபத்தின் போது, உழவு இயந்திரத்தில் இருந்த மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எதிர்திசையில் பயணித்த வாகனங்களின் ஒளி காரணமாக, டிப்பர் வாகனத்தின் சாரதி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை சரியாக கவனிக்காததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.