கொழும்பில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வொன்றில் பாதுகாக்கப்பட்ட உயிரினமான மலைப்பாம்பைத் தனது கழுத்தில் சுற்றியவாறு நடனமாடிய யுவதியைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் டி.ஜே. பிரேமரத்ன உத்தரவிட்டார்.
நேத்மி ஹிரண்யா என்ற யுவதியைக் கைது செய்யுமாறே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தாக்கல் செய்த முறைப்பாட்டை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மலைப்பாம்பை ஆபத்தான முறையில் கையாண்டு நடனமாடியதன் மூலம், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் குற்றம் இழைத்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக வனவிலங்கு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு குறித்த யுவதிக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எனினும், அவர் அதனைப் புறக்கணித்து சமுகமளிக்கத் தவறியதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
உண்மைகளைக் கருத்திற்கொண்ட நீதவான், சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த பிரபல ஒப்பனை கலைஞர் சந்திமால் ஜயசிங்கவிடமும் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துகொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மலைப்பாம்புடன் உருண்டு, புரண்டு நடனமாடிய யுவதி; கொழும்பு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு கொழும்பில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வொன்றில் பாதுகாக்கப்பட்ட உயிரினமான மலைப்பாம்பைத் தனது கழுத்தில் சுற்றியவாறு நடனமாடிய யுவதியைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் டி.ஜே. பிரேமரத்ன உத்தரவிட்டார்.நேத்மி ஹிரண்யா என்ற யுவதியைக் கைது செய்யுமாறே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தாக்கல் செய்த முறைப்பாட்டை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன்போது மலைப்பாம்பை ஆபத்தான முறையில் கையாண்டு நடனமாடியதன் மூலம், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் குற்றம் இழைத்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக வனவிலங்கு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு குறித்த யுவதிக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.எனினும், அவர் அதனைப் புறக்கணித்து சமுகமளிக்கத் தவறியதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.உண்மைகளைக் கருத்திற்கொண்ட நீதவான், சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.அத்துடன், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த பிரபல ஒப்பனை கலைஞர் சந்திமால் ஜயசிங்கவிடமும் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துகொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது.