• Aug 26 2025

யாழில் வீட்டுக் கூரையிலிருந்து கீழே விழுந்த இளைஞன் உயிரிழப்பு.!

Aathira / Aug 25th 2025, 9:31 am
image

யாழில் வீட்டு கூரையை சீர் செய்வதற்காக முயன்ற இளைஞர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். 

கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரம் பிரணவன் என்ற 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் வீட்டின் சீற்றினை சீர் செய்வதற்காக கூரையின் மேல் ஏறியுள்ளார். இதன்போது சீற் உடைந்து கீழே விழுந்த நிலையில் மயக்கமுற்றுள்ளார்.

பின்னர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

யாழில் வீட்டுக் கூரையிலிருந்து கீழே விழுந்த இளைஞன் உயிரிழப்பு. யாழில் வீட்டு கூரையை சீர் செய்வதற்காக முயன்ற இளைஞர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரம் பிரணவன் என்ற 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த இளைஞன் வீட்டின் சீற்றினை சீர் செய்வதற்காக கூரையின் மேல் ஏறியுள்ளார். இதன்போது சீற் உடைந்து கீழே விழுந்த நிலையில் மயக்கமுற்றுள்ளார்.பின்னர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement