திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டியுடன் மோதிய சருகுப்புலி ஒன்று உயிரிழந்துள்ளது.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு பகுதியில் நேற்று (12) திங்கட்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று பயணித்துக்கொண்டிருந்தபோது, வீதியைக் கடக்க முற்பட்ட சருகுப்புலி எதிர்பாராத விதமாக முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் சருகுப்புலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மோதலின் காரணமாக முச்சக்கர வண்டியின் முன்பகுதியும் சிறிதளவு சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.
இரவு நேரத்தில் திடீரென குறுக்கே வந்த சருகுப்புலி – அடுத்த நொடியில் நேர்ந்த சோகம் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டியுடன் மோதிய சருகுப்புலி ஒன்று உயிரிழந்துள்ளது.மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு பகுதியில் நேற்று (12) திங்கட்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று பயணித்துக்கொண்டிருந்தபோது, வீதியைக் கடக்க முற்பட்ட சருகுப்புலி எதிர்பாராத விதமாக முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.இந்த விபத்தில் சருகுப்புலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும், மோதலின் காரணமாக முச்சக்கர வண்டியின் முன்பகுதியும் சிறிதளவு சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.