அக்குறணை, குடுகலை பகுதியில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் இன்று (04) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டதுடன், பிரதான வீதியின் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்து இடம்பெற்றபோது, தீக்குள் சிக்கியிருந்த வர்த்தக நிலையத்தின் காவலாளியை பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
தீ விபத்தையடுத்து தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
எனினும், தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் கடுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதிகாலை பற்றியெரிந்த வர்த்தக நிலையம் - நடந்தது என்ன பெரும் பதற்றம் அக்குறணை, குடுகலை பகுதியில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் இன்று (04) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டதுடன், பிரதான வீதியின் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்தத் தீ விபத்து இடம்பெற்றபோது, தீக்குள் சிக்கியிருந்த வர்த்தக நிலையத்தின் காவலாளியை பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.தீ விபத்தையடுத்து தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இந்நிலையில், தற்போது தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.எனினும், தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.சம்பவம் தொடர்பில் கடுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.