• Oct 23 2026

500 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்; இரு உயிர்களை காப்பாற்றப் போராடிய மக்கள்! இறுதியில் நேர்ந்த சோகம்

Chithra / Oct 23rd 2026, 10:50 am
image



கண்டி - புஸ்ஸல்லாவ பகுதியில் கெப் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி 500 அடிக்கும் அதிகமான ஆழமுடைய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை சாயவுக்கு அருகிலுள்ள கொட்டகேபிட்டிய வீதியில் நேற்று இரவு இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தில் கெப் வாகனத்தின் சாரதியான கொட்டகேபிட்டிய, மாஸ்வெல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய துசித லக்சிறி பண்டார ஜயசுந்தர சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


அத்துடன், குறித்த வாகனத்தில் பயணித்த அதே பகுதியைச் சேர்ந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான 52 வயதுடைய சாந்தனி நவரத்ன என்ற பெண்ணும் படுகாயமடைந்துள்ளார்.


இதனையடுத்து, அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களுக்கு மத்தியில் காயமடைந்த பெண்ணை பள்ளத்திலிருந்து மீட்டு, 1990 அவசர அம்புலன்ஸ் சேவையின் உதவியுடன் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த சாரதி ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர் எனத் தெரியவந்துள்ளது.


அவர் அன்றைய தினம் தனது பணிகளை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் குறித்த பெண்ணையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்.


இதன்போதே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


விபத்தில் காயமடைந்த பெண்ணைக் காப்பாற்றுவதற்காக அப்பகுதி மக்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதனிடையே, கெப் வாகனத்தின் கீழ் சிக்கி உயிரிழந்த துசித ஹேரத்தின் சடலத்தைப் பள்ளத்திலிருந்து மீட்பதற்காக அட்டபாகை அனர்த்த மீட்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.


இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


500 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்; இரு உயிர்களை காப்பாற்றப் போராடிய மக்கள் இறுதியில் நேர்ந்த சோகம் கண்டி - புஸ்ஸல்லாவ பகுதியில் கெப் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி 500 அடிக்கும் அதிகமான ஆழமுடைய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை சாயவுக்கு அருகிலுள்ள கொட்டகேபிட்டிய வீதியில் நேற்று இரவு இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் கெப் வாகனத்தின் சாரதியான கொட்டகேபிட்டிய, மாஸ்வெல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய துசித லக்சிறி பண்டார ஜயசுந்தர சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.அத்துடன், குறித்த வாகனத்தில் பயணித்த அதே பகுதியைச் சேர்ந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான 52 வயதுடைய சாந்தனி நவரத்ன என்ற பெண்ணும் படுகாயமடைந்துள்ளார்.இதனையடுத்து, அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களுக்கு மத்தியில் காயமடைந்த பெண்ணை பள்ளத்திலிருந்து மீட்டு, 1990 அவசர அம்புலன்ஸ் சேவையின் உதவியுடன் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த சாரதி ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர் எனத் தெரியவந்துள்ளது.அவர் அன்றைய தினம் தனது பணிகளை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் குறித்த பெண்ணையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்.இதன்போதே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்தில் காயமடைந்த பெண்ணைக் காப்பாற்றுவதற்காக அப்பகுதி மக்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனிடையே, கெப் வாகனத்தின் கீழ் சிக்கி உயிரிழந்த துசித ஹேரத்தின் சடலத்தைப் பள்ளத்திலிருந்து மீட்பதற்காக அட்டபாகை அனர்த்த மீட்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement