பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல், சாண்டா மரியா நகர மையத்தில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க பள்ளியான கொலேஜியோ மரிஸ்டா சாண்டா மரியாவின் மையப் பிரிவில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று (26) மாலை பள்ளியின் கட்டிடத்தின் பின்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ முழுவதும் மேல் தளங்களுக்கு விரைவாக பரவியுள்ளது.
தீவிபத்தையடுத்து குறித்த பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் பல குழுக்களுடன் உடனடியாக விரைந்தனர்.
மாலை வரை தீயை அணைக்க தீவிரமாக பணியாற்றி வந்தனர்.
எனினும் தீ வேகமாகப் பரவி வான்வழி காட்சிகளில் கடுமையான தீப்பிழம்புகள் மற்றும் அடர்ந்த புகைமண்டலம் உருவாகியது.
எனினும் தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் தீ விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தீ விபத்தையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு அவசர நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காக சுற்றியுள்ள பகுதியில் அதிகாரிகள் போக்குவரத்தை மாற்றியுள்ளனர்.
தீ பரவி வானில் தீப்பிழம்புகளும் புகைமண்டலமும் உருவாகும் காட்சி பதறவைத்துள்ளது.
பிரேசிலில் பள்ளிக்கட்டடத்தில் திடீரென பற்றிய தீ ; தீப்பிழம்பு, புகைமண்டலம் உருவாகிய பதற்றக்காட்சி பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல், சாண்டா மரியா நகர மையத்தில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க பள்ளியான கொலேஜியோ மரிஸ்டா சாண்டா மரியாவின் மையப் பிரிவில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (26) மாலை பள்ளியின் கட்டிடத்தின் பின்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ முழுவதும் மேல் தளங்களுக்கு விரைவாக பரவியுள்ளது. தீவிபத்தையடுத்து குறித்த பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் பல குழுக்களுடன் உடனடியாக விரைந்தனர். மாலை வரை தீயை அணைக்க தீவிரமாக பணியாற்றி வந்தனர். எனினும் தீ வேகமாகப் பரவி வான்வழி காட்சிகளில் கடுமையான தீப்பிழம்புகள் மற்றும் அடர்ந்த புகைமண்டலம் உருவாகியது. எனினும் தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் தீ விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தீ விபத்தையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு அவசர நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காக சுற்றியுள்ள பகுதியில் அதிகாரிகள் போக்குவரத்தை மாற்றியுள்ளனர். தீ பரவி வானில் தீப்பிழம்புகளும் புகைமண்டலமும் உருவாகும் காட்சி பதறவைத்துள்ளது.