• Aug 08 2025

மூதூரில் கார் மற்றும் டிப்பர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; ஒருவர் பலி!

Chithra / Aug 8th 2025, 9:26 am
image


திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் கார் மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.  

படுகாயமடைந்தவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (08) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காரில் பயணித்த தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஹினாயத்துல்லாஹ் ஜெம்சித் என்பவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர் தோப்பூரைச் சேர்ந்த முஸ்தகீம் சியான் என தெரியவருகிறது. டிப்பர் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

காரில் பயணித்தவர்கள் தோப்பூரிலிந்து மன்னாருக்கு வேலை நிமிர்த்தமாக சென்று கொண்டிருந்தபோது எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனத்துடன் நேருக்குநேர் மோதியதிலே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


மூதூரில் கார் மற்றும் டிப்பர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; ஒருவர் பலி திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் கார் மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.  படுகாயமடைந்தவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (08) காலை இடம்பெற்றுள்ளது.விபத்தில் காரில் பயணித்த தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஹினாயத்துல்லாஹ் ஜெம்சித் என்பவர் உயிரிழந்துள்ளார்.காயமடைந்தவர் தோப்பூரைச் சேர்ந்த முஸ்தகீம் சியான் என தெரியவருகிறது. டிப்பர் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.காரில் பயணித்தவர்கள் தோப்பூரிலிந்து மன்னாருக்கு வேலை நிமிர்த்தமாக சென்று கொண்டிருந்தபோது எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனத்துடன் நேருக்குநேர் மோதியதிலே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement