திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பேமரத்னகே உமேஷ் ஆலோக எனவும் தெரியவந்துள்ளது.
வழமை போல் நண்பர்களுடன் குளிப்பதாக சொல்லிவிட்டு நேற்று முற்பகல் 1.30 மணியளவில் வீட்டிலிருந்து சென்றதாக தெரியவருகின்றது.
பின்னர் உயிரிழந்த நிலையில் நேற்றிரவு 8.15 மணியளவில் மீட்கப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மாணவன் கோமரங்கடவல -மதவாச்சி சிங்கள வித்தியாலயத்தில் 11ம் தரத்தில் கல்வி பயின்று வருபவர் எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும்,மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.
நண்பர்களுடன் குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன்; திருமலையில் சடலமாக மீட்கப்பட்ட சோகம் திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பேமரத்னகே உமேஷ் ஆலோக எனவும் தெரியவந்துள்ளது.வழமை போல் நண்பர்களுடன் குளிப்பதாக சொல்லிவிட்டு நேற்று முற்பகல் 1.30 மணியளவில் வீட்டிலிருந்து சென்றதாக தெரியவருகின்றது. பின்னர் உயிரிழந்த நிலையில் நேற்றிரவு 8.15 மணியளவில் மீட்கப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவன் கோமரங்கடவல -மதவாச்சி சிங்கள வித்தியாலயத்தில் 11ம் தரத்தில் கல்வி பயின்று வருபவர் எனவும் தெரியவந்துள்ளது.உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும்,மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.