கொழும்பு - காலி முகத்திடலுக்கு முன்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நபரொருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக தெரிவித்து நேற்று பிற்பகல் குழப்பம் விளைவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள சமிக்ஞை விளக்கு கம்பத்தில் ஏறி தன்னுடை உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக குறித்த நபர் மிரட்டியுள்ளார்.
குறித்த நபரை அங்கிருந்த மக்கள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும், அந்த நபர் கீழே இறங்காமல் தொடர்ந்தும் சமிக்ஞை விளக்கு கம்பத்திலேயே அமர்ந்திருந்த நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டனர்.
இதையடுத்து குறித்த நபரை பொலிஸார் அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது
சமிக்ஞை விளக்கு கம்பத்தில் ஏறி உயிரை மாய்க்க முயன்ற நபர்; ஜனாதிபதி செயலகத்திற்கு முன் பரபரப்பு கொழும்பு - காலி முகத்திடலுக்கு முன்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நபரொருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக தெரிவித்து நேற்று பிற்பகல் குழப்பம் விளைவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள சமிக்ஞை விளக்கு கம்பத்தில் ஏறி தன்னுடை உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக குறித்த நபர் மிரட்டியுள்ளார். குறித்த நபரை அங்கிருந்த மக்கள் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.எனினும், அந்த நபர் கீழே இறங்காமல் தொடர்ந்தும் சமிக்ஞை விளக்கு கம்பத்திலேயே அமர்ந்திருந்த நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டனர். இதையடுத்து குறித்த நபரை பொலிஸார் அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது