• Jul 05 2025

யாழில் போஷாக்கை வலியுறுத்தி மாபெரும் நடைபவனி!

shanuja / Jul 4th 2025, 5:37 pm
image

 "பசியை போக்குவோம்" எனும் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனியும் போசணைக் கண்காட்சியும்  இன்று  நடைபெற்றது.


வேள்ட் விஷன் லங்கா நிறுவனம் சங்கானை  பிரதேச அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் இணைந்து குறித்த நடைபவனி இடம்பெற்றது. 


நடைபவனியானது சங்கானை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து சங்கானை கலாச்சார மண்டபத்தை சென்றடைந்தது. அங்கு விருந்தினர்களால் போசணைக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போசணை பற்றிய விழிப்புணர்வு பொம்மலாட்டம் இடம்பெற்றது.


நிகழ்வில் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் அரச கொள்கை நியமங்களை உறுதியாக செயற்படுத்த வேண்டி மாணவர்களினால் கையொப்பமிட்ட விண்ணப்பக் கோரிக்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.


நிகழ்வில் மேலதிக வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் லாவண்யா சுகந்தன், சமுதாய வைத்திய நிபுணர் சிவகணேஸ், சங்கானை உதவி பிரதேச செயலர் திருமதி பிரணவசொரூபி சிவகரன், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் DR . A.கேதீஸ்வரன், வலிகாம வலய பிரதிக் கல்விப் பணிபாளர் சஞ்சீவன், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி DR யதுநந்தனன், வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் சண்முகநாதன் ஜெயந்தன், ENOUGH Campaign முகாமையாளர் செல்வி லாவண்யா சூரியகுமார், World Vision முகாமையாளர் யூட் நிசாந்தன், அரச உத்தியோகத்தர்கள், World Vision உத்தியோகத்தர்கள், சங்கானை பிரதேச சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் இணைந்து கொண்டனர்.

யாழில் போஷாக்கை வலியுறுத்தி மாபெரும் நடைபவனி  "பசியை போக்குவோம்" எனும் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனியும் போசணைக் கண்காட்சியும்  இன்று  நடைபெற்றது.வேள்ட் விஷன் லங்கா நிறுவனம் சங்கானை  பிரதேச அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் இணைந்து குறித்த நடைபவனி இடம்பெற்றது. நடைபவனியானது சங்கானை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து சங்கானை கலாச்சார மண்டபத்தை சென்றடைந்தது. அங்கு விருந்தினர்களால் போசணைக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போசணை பற்றிய விழிப்புணர்வு பொம்மலாட்டம் இடம்பெற்றது.நிகழ்வில் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் அரச கொள்கை நியமங்களை உறுதியாக செயற்படுத்த வேண்டி மாணவர்களினால் கையொப்பமிட்ட விண்ணப்பக் கோரிக்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.நிகழ்வில் மேலதிக வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் லாவண்யா சுகந்தன், சமுதாய வைத்திய நிபுணர் சிவகணேஸ், சங்கானை உதவி பிரதேச செயலர் திருமதி பிரணவசொரூபி சிவகரன், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் DR . A.கேதீஸ்வரன், வலிகாம வலய பிரதிக் கல்விப் பணிபாளர் சஞ்சீவன், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி DR யதுநந்தனன், வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் சண்முகநாதன் ஜெயந்தன், ENOUGH Campaign முகாமையாளர் செல்வி லாவண்யா சூரியகுமார், World Vision முகாமையாளர் யூட் நிசாந்தன், அரச உத்தியோகத்தர்கள், World Vision உத்தியோகத்தர்கள், சங்கானை பிரதேச சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் இணைந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement