• Dec 09 2024

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய அரசு முன்வரவேண்டும் - ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு!

Tharmini / Nov 11th 2024, 1:32 pm
image

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு வழங்கக்கூடிய அரசாங்கம் வர வேண்டும்.

போர்ச்சூழலானது 2009 உடன் முடிவடைந்துள்ள நிலையில் இந்த அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய ஜனாதிபதி அனுரகுமாரவின் தலைமையிலான அரசு, தமிழ் மக்களது பிரச்சினை தொடர்பான நிலைப்பாடு என்ன? அதற்கு அவர்கள் வழங்க உள்ள தீர்வு என்ன? என்பதை கூறியதை நாங்கள் இதுவரை காணவில்லை.

வடக்கு கிழக்கினை பிரிப்பதற்கு வழக்கு தாக்கல் செய்ததும் ஜேவிபி தான்.

அத்துடன் சுனாமிக் கட்டமைப்புக்கு எதிராக செயல்பட்டதும் ஜேவிபி தான். அதுபோல போர் சூழலில் போருக்கு சாதகமாக செயல்பட்டதும் ஜேவிபி தான். தற்போது என்.பி.பி என்ற பெயரில் அரசு ஒன்று வந்துள்ளது. எனவே அவர்களிடமும் அந்த பழைய நிலைப்பாடு இருக்கின்றதா என்று விடயம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். 

ராஜபக்ச அரசாங்கத்தின் களவுகள், மோசடிகள் என்பவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு என்.பி.பி அரசு முன் வந்திருக்கின்றது. அதை நான் நாங்கள் வரவேற்கின்றோம். அது அவசியமான செயல்பாடு. அத்துடன் ராஜபக்ச அரசினால் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பாகவும் இந்த அரசாங்கம் விசாரணைகள் நடாத்த வேண்டும். அந்தக் கொலைகளுக்கு யார் காரணம் என கண்டறியப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை. காணாமல் போனவர்களது உறவினர்களால் 2000 நாட்களுக்கு மேலாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்தப் போராட்டத்திற்கான முடிவு என்ன? இந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு என்ன? அது தொடர்பாக இந்த அரசு தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டும். 

ஏற்கனவே இருந்த அரசாங்கங்கள் என்ன செய்தார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் தற்போது உள்ள ஜனாதிபதி இவற்றினை செய்ய வேண்டும்.

அதிகாரப் பரவலாக்கம் இடம்பெற வேண்டும். 13-வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை எடுத்துக் கொண்டால் அது தொடர்பாக இந்த அரசாங்கம் இதுவரை முடிவு சொல்லவில்லை.

13இனை அவர்கள் ஏற்றுக் கொள்வதா இல்லையா என்று கூட சொல்லவில்லை. இந்த ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் 13 வது சீர்திருத்தத்தை எதிர்த்திருந்தனர்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் குறைந்த அளவு வாக்கினையே ஜனாதிபதி அனுரகுமார அவர்களுக்கு வழங்கியிருந்தனர். அதற்குக் காரணம் இவ்வாறான பிரச்சினைகளுக்கு உறுதியான ஒரு தீர்வு அவர்களிடம் இல்லை என்பதே என நாங்கள் நினைக்கின்றோம்.

பொருளாதாரப் பிரச்சினையை என்பது நாட்டில் எல்லோருக்கும் இருக்கின்றது. பொருளாதாரப் பிரச்சினையை தீர்த்தால் எல்லாம் சரி என்பதற்கு அப்பால் சென்று வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டியது அவசியம். இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற ரீதியில் நாங்கள் அதற்காகவும் குரல் கொடுப்போம் என்றார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய அரசு முன்வரவேண்டும் - ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு வழங்கக்கூடிய அரசாங்கம் வர வேண்டும். போர்ச்சூழலானது 2009 உடன் முடிவடைந்துள்ள நிலையில் இந்த அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய ஜனாதிபதி அனுரகுமாரவின் தலைமையிலான அரசு, தமிழ் மக்களது பிரச்சினை தொடர்பான நிலைப்பாடு என்ன அதற்கு அவர்கள் வழங்க உள்ள தீர்வு என்ன என்பதை கூறியதை நாங்கள் இதுவரை காணவில்லை.வடக்கு கிழக்கினை பிரிப்பதற்கு வழக்கு தாக்கல் செய்ததும் ஜேவிபி தான். அத்துடன் சுனாமிக் கட்டமைப்புக்கு எதிராக செயல்பட்டதும் ஜேவிபி தான். அதுபோல போர் சூழலில் போருக்கு சாதகமாக செயல்பட்டதும் ஜேவிபி தான். தற்போது என்.பி.பி என்ற பெயரில் அரசு ஒன்று வந்துள்ளது. எனவே அவர்களிடமும் அந்த பழைய நிலைப்பாடு இருக்கின்றதா என்று விடயம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். ராஜபக்ச அரசாங்கத்தின் களவுகள், மோசடிகள் என்பவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு என்.பி.பி அரசு முன் வந்திருக்கின்றது. அதை நான் நாங்கள் வரவேற்கின்றோம். அது அவசியமான செயல்பாடு. அத்துடன் ராஜபக்ச அரசினால் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பாகவும் இந்த அரசாங்கம் விசாரணைகள் நடாத்த வேண்டும். அந்தக் கொலைகளுக்கு யார் காரணம் என கண்டறியப்பட வேண்டும்.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை. காணாமல் போனவர்களது உறவினர்களால் 2000 நாட்களுக்கு மேலாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்தப் போராட்டத்திற்கான முடிவு என்ன இந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு என்ன அது தொடர்பாக இந்த அரசு தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டும். ஏற்கனவே இருந்த அரசாங்கங்கள் என்ன செய்தார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் தற்போது உள்ள ஜனாதிபதி இவற்றினை செய்ய வேண்டும்.அதிகாரப் பரவலாக்கம் இடம்பெற வேண்டும். 13-வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை எடுத்துக் கொண்டால் அது தொடர்பாக இந்த அரசாங்கம் இதுவரை முடிவு சொல்லவில்லை. 13இனை அவர்கள் ஏற்றுக் கொள்வதா இல்லையா என்று கூட சொல்லவில்லை. இந்த ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் 13 வது சீர்திருத்தத்தை எதிர்த்திருந்தனர்.நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் குறைந்த அளவு வாக்கினையே ஜனாதிபதி அனுரகுமார அவர்களுக்கு வழங்கியிருந்தனர். அதற்குக் காரணம் இவ்வாறான பிரச்சினைகளுக்கு உறுதியான ஒரு தீர்வு அவர்களிடம் இல்லை என்பதே என நாங்கள் நினைக்கின்றோம்.பொருளாதாரப் பிரச்சினையை என்பது நாட்டில் எல்லோருக்கும் இருக்கின்றது. பொருளாதாரப் பிரச்சினையை தீர்த்தால் எல்லாம் சரி என்பதற்கு அப்பால் சென்று வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டியது அவசியம். இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற ரீதியில் நாங்கள் அதற்காகவும் குரல் கொடுப்போம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement