• Jul 27 2026

வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம்; குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக கிடந்த நபர்

Chithra / Jul 26th 2026, 4:45 pm
image


காலி, கராப்பிட்டிய – மைத்திப் பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த 58 வயதுடைய திருமணமாகாத ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அவதானித்த அருகிலுள்ள வீட்டில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், இது தொடர்பில் கராப்பிட்டிய பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.


இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் வீட்டை சோதனையிட்டபோது, குளியலறையில் இருந்து குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக காலி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம்; குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக கிடந்த நபர் காலி, கராப்பிட்டிய – மைத்திப் பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த 58 வயதுடைய திருமணமாகாத ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அவதானித்த அருகிலுள்ள வீட்டில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், இது தொடர்பில் கராப்பிட்டிய பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் வீட்டை சோதனையிட்டபோது, குளியலறையில் இருந்து குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக காலி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement