• Apr 16 2026

நாடு முழுவதும் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 802 பேர் கைது!

shanu / Feb 10th 2026, 12:57 pm
image

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் மூலம் 802 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 


நேற்று (09) வெளியிடப்பட்ட தினசரி அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த நடவடிக்கையின் போது 791 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தொடர்பான 588 சுற்றிவளைப்புகளே அதிகூடிய எண்ணிக்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 


இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 11 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 802 பேர் கைது நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் மூலம் 802 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (09) வெளியிடப்பட்ட தினசரி அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது 791 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தொடர்பான 588 சுற்றிவளைப்புகளே அதிகூடிய எண்ணிக்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 11 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement