சீனாவில் இறைச்சிக்காகக் கடத்திச் செல்லப்பட்ட 7 நாய்கள், மரணத்தின் பிடியில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளன.
இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வடமேற்கு சீனாவின் ஜிலின் மாகாணத்திலுள்ள தலைநகர் சோங்கிங்கிலேயே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
'கார்கி' என்ற நாயின் வழிநடத்தலில் ஓடும் வாகனத்திலிருந்து குதித்துத் தப்பிய இந்த நாய்கள், சுமார் 17 கிலோமீற்றர் தூரம் இரண்டு நாட்கள் தொடர்ந்து பயணித்துள்ளன.
இறுதியில் சமூக வலைதளங்களில் வைரலான காணொளி ஒன்றின் மூலம் உரிமையாளர்களால் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நாய்களின் இந்த அபார ஒற்றுமை இணையவாசிகளை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
ஒற்றுமையாக செயல்பட்டு சாவினைச் சவாலாக்கிய 7 நாய்கள் சீனாவில் இறைச்சிக்காகக் கடத்திச் செல்லப்பட்ட 7 நாய்கள், மரணத்தின் பிடியில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளன.இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. வடமேற்கு சீனாவின் ஜிலின் மாகாணத்திலுள்ள தலைநகர் சோங்கிங்கிலேயே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.'கார்கி' என்ற நாயின் வழிநடத்தலில் ஓடும் வாகனத்திலிருந்து குதித்துத் தப்பிய இந்த நாய்கள், சுமார் 17 கிலோமீற்றர் தூரம் இரண்டு நாட்கள் தொடர்ந்து பயணித்துள்ளன.இறுதியில் சமூக வலைதளங்களில் வைரலான காணொளி ஒன்றின் மூலம் உரிமையாளர்களால் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.நாய்களின் இந்த அபார ஒற்றுமை இணையவாசிகளை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.