யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்குப் பகுதியில் நேற்று (01) மாலை இடம்பெற்ற நான்கு வெவ்வேறு சம்பவங்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
தெல்லிப்பளை, அலுக்கைச் சந்தியில் மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றுமொருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தின் போது மதில் இடிந்து இருவர் மீதும் விழுந்தமையால் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதில் சுன்னாகம் மற்றும் நீர்வேலி பகுதிகளைச் சேர்ந்த 17 வயதுடைய பிரதீப் சஞ்சய் , 36 வயதுடைய ரஜீவன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, அளவெட்டி கிழக்கைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் போதை ஊசி பயன்படுத்திய நிலையில் உயிரிழந்துள்ளார்.
நீண்டகாலமாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்த குறித்த இளைஞர், நேற்றுமுன்தினம் மற்றுமொரு வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று போதை ஊசி பயன்படுத்தியபோது ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வறுத்தலைவிளான் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த முதியவர் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், சுன்னாகம் பகுதியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் தவறுதலாக நீரில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரெனக் கால் வழுக்கி அருகில் இருந்த நீர் தேங்கிய பகுதியில் தவறி வீழ்ந்துள்ளார். நீண்ட நேரமாக அவர் கரைக்கு வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோதே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தமை கண்டறியப்பட்டது.
அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு சம்பவங்களிலும் உயிரிழந்த நால்வரின் சடலங்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
யாழில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 சம்பவங்கள் - ஐவர் பரிதாபமாக உயிரிழப்பு யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்குப் பகுதியில் நேற்று (01) மாலை இடம்பெற்ற நான்கு வெவ்வேறு சம்பவங்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.தெல்லிப்பளை, அலுக்கைச் சந்தியில் மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மற்றுமொருவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்தின் போது மதில் இடிந்து இருவர் மீதும் விழுந்தமையால் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இதில் சுன்னாகம் மற்றும் நீர்வேலி பகுதிகளைச் சேர்ந்த 17 வயதுடைய பிரதீப் சஞ்சய் , 36 வயதுடைய ரஜீவன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இதேவேளை, அளவெட்டி கிழக்கைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் போதை ஊசி பயன்படுத்திய நிலையில் உயிரிழந்துள்ளார்.நீண்டகாலமாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்த குறித்த இளைஞர், நேற்றுமுன்தினம் மற்றுமொரு வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், நேற்று போதை ஊசி பயன்படுத்தியபோது ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.அத்துடன், வறுத்தலைவிளான் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த முதியவர் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மேலும், சுன்னாகம் பகுதியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் தவறுதலாக நீரில் விழுந்து உயிரிழந்துள்ளார். வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரெனக் கால் வழுக்கி அருகில் இருந்த நீர் தேங்கிய பகுதியில் தவறி வீழ்ந்துள்ளார். நீண்ட நேரமாக அவர் கரைக்கு வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோதே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தமை கண்டறியப்பட்டது.அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த நான்கு சம்பவங்களிலும் உயிரிழந்த நால்வரின் சடலங்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.