மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
35 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்தில் இன்றையதினம் தீவக மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூறி சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்தனர்.
படுகொலை செய்யப்பட உறவுகளின் வாழும் உறவுகளில் இருவர் முதன்மைச் சுடரேற்றி நினைவிடத்துக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்தனர்.
குறித்த நிகழ்வில் ஏற்பாட்டாளர் பிரகலாதன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி.அசோக்குமர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்களும் கலந்து தமது உணர்வுகளை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தினர்.
1990 ஆம் ஆண்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் கொல்லப்படும் இருந்தனர்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் பல்வேறு தரப்பினரும் கூறினர்.
இதேநேரம் குறித்த சம்பவம் குறித்து வாழும் சாட்சியாக இருக்கும் படுகொலைசெய்யப்பட்ட இருவரது தாயாரும் சகோதரியும் அன்றைய நாள் வடுக்களையும் வேதனைகளையும் சாட்சியாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
இதன்போது கணவனையும் சகோதரனையும் இழந்த தாயார் கூறுகையில், 1990.08.25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இந்த படுகொலையும் காணாமலாக்கலும் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டது.
இதில் தனது கணவரும் சகோதரனும் கைதுசெய்யப்படு இராணுவத்தால் என் கண் முன்னே கைது செய்யப்படு எனது உறவினர் ஒருவரது வீடின் பின் பகுதியில் வைத்து கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கினர்.
அதன் பின்னர் அவர்களை சுட்டுக் கொன்றனர். இந்த கோர சம்பவத்துக்கு நான் கண்கண்ட சாட்சி.
அத்துடன் எனது சகோதரனின் மனைவியையும் இன்னொரு இளம் பெண்ணையும் கைதுசெய்யது ஒரு வீட்டுக்குள் கொண்டு சென்றனர்.
அவர்கள் இருவரையும் இராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்ததுடன் உள்ளாடைகளைக் கூட கையில் கொடுத்து அனுப்பிய கொடுமையையும் நான் நேரில் கண்டு அனுபவித்தேன்.
அதேபோன்று சுற்றுவட்டத்தில் இவ்வாறு கொல்லப்பட்ட பல உடலங்களை சிலவற்றை அவ்வூர் மக்களைக்கொண்டு சேகரித்து கிணறுகளில் போட்டு மூடினர்.
அவ்வாறு புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்றுதான் இன்று நினைவு கூறப்படும் கிணறு.
இந்த கிணறு போன்று இன்னும் சில கிணறுகள் இன்னும் இருக்கின்றன என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள்; கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள் மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.35 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்தில் இன்றையதினம் தீவக மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூறி சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்தனர்.படுகொலை செய்யப்பட உறவுகளின் வாழும் உறவுகளில் இருவர் முதன்மைச் சுடரேற்றி நினைவிடத்துக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்தனர்.குறித்த நிகழ்வில் ஏற்பாட்டாளர் பிரகலாதன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி.அசோக்குமர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்களும் கலந்து தமது உணர்வுகளை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தினர். 1990 ஆம் ஆண்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் கொல்லப்படும் இருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் பல்வேறு தரப்பினரும் கூறினர்.இதேநேரம் குறித்த சம்பவம் குறித்து வாழும் சாட்சியாக இருக்கும் படுகொலைசெய்யப்பட்ட இருவரது தாயாரும் சகோதரியும் அன்றைய நாள் வடுக்களையும் வேதனைகளையும் சாட்சியாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.இதன்போது கணவனையும் சகோதரனையும் இழந்த தாயார் கூறுகையில், 1990.08.25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இந்த படுகொலையும் காணாமலாக்கலும் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டது.இதில் தனது கணவரும் சகோதரனும் கைதுசெய்யப்படு இராணுவத்தால் என் கண் முன்னே கைது செய்யப்படு எனது உறவினர் ஒருவரது வீடின் பின் பகுதியில் வைத்து கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கினர். அதன் பின்னர் அவர்களை சுட்டுக் கொன்றனர். இந்த கோர சம்பவத்துக்கு நான் கண்கண்ட சாட்சி.அத்துடன் எனது சகோதரனின் மனைவியையும் இன்னொரு இளம் பெண்ணையும் கைதுசெய்யது ஒரு வீட்டுக்குள் கொண்டு சென்றனர்.அவர்கள் இருவரையும் இராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்ததுடன் உள்ளாடைகளைக் கூட கையில் கொடுத்து அனுப்பிய கொடுமையையும் நான் நேரில் கண்டு அனுபவித்தேன்.அதேபோன்று சுற்றுவட்டத்தில் இவ்வாறு கொல்லப்பட்ட பல உடலங்களை சிலவற்றை அவ்வூர் மக்களைக்கொண்டு சேகரித்து கிணறுகளில் போட்டு மூடினர். அவ்வாறு புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்றுதான் இன்று நினைவு கூறப்படும் கிணறு.இந்த கிணறு போன்று இன்னும் சில கிணறுகள் இன்னும் இருக்கின்றன என கண்ணீர் மல்க தெரிவித்தார்.