• Jun 03 2026

கல்லடியில் போதைப்பொருளுக்கு அடிமையாகி சிகிச்சை பெற்ற 30 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

Chithra / Jun 3rd 2026, 11:48 am
image

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ள போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு நிலையத்தில் 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட 30 பேர் நேற்றையதினம் (2) நற்சான்றிதழ்களை வழங்கி உறவினர்களிடம் சம்பிரதாய பூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

 

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் கீழ் தேசிய அபாயகர ஒளெடங்கள் கட்டுப்பாட்டு சபையினால் போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு இடைத்தாங்கல் நிலையம் கடந்த மே மாதம் 20ம் திகதி திறந்து வைக்கப்பட்டு அதில் முதல் கட்டமாக 30 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


இதில் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட 30 பேரையும் சமூகத்தில் இணைக்க உறவினர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு  புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரியும் தேசிய அபாயபர ஒளெடங்கள் கட்டுப்பாட்டு சபையின் மாவடட்ட இணைப்பாளர் ப. டினேஸ் தலைமையில் இடம்பெற்றது.


கல்லடியில் போதைப்பொருளுக்கு அடிமையாகி சிகிச்சை பெற்ற 30 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ள போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு நிலையத்தில் 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட 30 பேர் நேற்றையதினம் (2) நற்சான்றிதழ்களை வழங்கி உறவினர்களிடம் சம்பிரதாய பூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் கீழ் தேசிய அபாயகர ஒளெடங்கள் கட்டுப்பாட்டு சபையினால் போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு இடைத்தாங்கல் நிலையம் கடந்த மே மாதம் 20ம் திகதி திறந்து வைக்கப்பட்டு அதில் முதல் கட்டமாக 30 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இதில் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட 30 பேரையும் சமூகத்தில் இணைக்க உறவினர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு  புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரியும் தேசிய அபாயபர ஒளெடங்கள் கட்டுப்பாட்டு சபையின் மாவடட்ட இணைப்பாளர் ப. டினேஸ் தலைமையில் இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement