• Jun 09 2026

3 மாத விரதம்; ஜப்பானில் இருந்து கதிர்காமத்திற்கு வருகை தந்து பௌத்த பக்தர்கள் விசேட வழிபாடு!

Chithra / Jun 8th 2026, 8:35 am
image

மூன்று மாத காலம் மாமிச உணவுகளைத் தவிர்த்து, கடுமையான விரதமிருந்து ஜப்பானில் இருந்து வருகை தந்துள்ள பௌத்த பக்தர்கள் குழுவொன்று, வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனித பூமியை வந்தடைந்து விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளது.


ஒன்பது பேரைக் கொண்ட இந்த ஜப்பானியப் பக்தர்கள் குழுவினர், கதிர்காமம் புனித பூமியில் தங்கியிருந்து அங்குள்ள மக்களுக்குப் பல்வேறு தான தர்மங்களை வழங்கியுள்ளனர். 


அத்துடன், கதிர்காமக் கந்த பெருமானை வேண்டி விசேட வழிபாடுகளையும், பிரார்த்தனைகளையும் முன்னெடுத்துள்ளனர். 


கதிர்காமக் கடவுளுக்காக இவர்கள் மூன்று நாட்கள் தொடர்ச்சியாகப் பூஜைகளை நடத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


தமது இந்த நெகிழ்ச்சியான ஆன்மீகப் பயணம் குறித்து ஜப்பானியப் பெண் பக்தர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், "நான் சுமார் 25 வருடங்களுக்கு முன்பே முதன்முறையாகக் கதிர்காமத்திற்கு வருகை தந்தேன். 


கதிர்காமக் கந்த பெருமானுடன் தமக்குள்ள ஆழமான ஆன்மீகத் தொடர்பு காரணமாகவே, அன்றிலிருந்து இன்றுவரை கதிர்காமத் தெய்வத்துக்காகத் தாம் இந்தத் தொடர் வழிபாடுகளையும், கடுமையான விரதங்களையும் மேற்கொண்டு வருகின்றோம்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


ஜப்பானிய பௌத்த பக்தர்கள், கதிர்காமக் கந்தன் மீது கொண்டுள்ள இத்தகைய பக்தி கலந்த ஈடுபாடு உள்ளூர் மக்களிடையேயும், ஏனைய பக்தர்களிடையேயும் பெரும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

3 மாத விரதம்; ஜப்பானில் இருந்து கதிர்காமத்திற்கு வருகை தந்து பௌத்த பக்தர்கள் விசேட வழிபாடு மூன்று மாத காலம் மாமிச உணவுகளைத் தவிர்த்து, கடுமையான விரதமிருந்து ஜப்பானில் இருந்து வருகை தந்துள்ள பௌத்த பக்தர்கள் குழுவொன்று, வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனித பூமியை வந்தடைந்து விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளது.ஒன்பது பேரைக் கொண்ட இந்த ஜப்பானியப் பக்தர்கள் குழுவினர், கதிர்காமம் புனித பூமியில் தங்கியிருந்து அங்குள்ள மக்களுக்குப் பல்வேறு தான தர்மங்களை வழங்கியுள்ளனர். அத்துடன், கதிர்காமக் கந்த பெருமானை வேண்டி விசேட வழிபாடுகளையும், பிரார்த்தனைகளையும் முன்னெடுத்துள்ளனர். கதிர்காமக் கடவுளுக்காக இவர்கள் மூன்று நாட்கள் தொடர்ச்சியாகப் பூஜைகளை நடத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.தமது இந்த நெகிழ்ச்சியான ஆன்மீகப் பயணம் குறித்து ஜப்பானியப் பெண் பக்தர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், "நான் சுமார் 25 வருடங்களுக்கு முன்பே முதன்முறையாகக் கதிர்காமத்திற்கு வருகை தந்தேன். கதிர்காமக் கந்த பெருமானுடன் தமக்குள்ள ஆழமான ஆன்மீகத் தொடர்பு காரணமாகவே, அன்றிலிருந்து இன்றுவரை கதிர்காமத் தெய்வத்துக்காகத் தாம் இந்தத் தொடர் வழிபாடுகளையும், கடுமையான விரதங்களையும் மேற்கொண்டு வருகின்றோம்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.ஜப்பானிய பௌத்த பக்தர்கள், கதிர்காமக் கந்தன் மீது கொண்டுள்ள இத்தகைய பக்தி கலந்த ஈடுபாடு உள்ளூர் மக்களிடையேயும், ஏனைய பக்தர்களிடையேயும் பெரும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement