• Aug 12 2025

யானைகளை பாதுகாப்பதற்காக 24 மணிநேர பாதுகாப்பு கெமரா!

Chithra / Aug 11th 2025, 3:02 pm
image

யானைகளை பாதுகாப்பதற்காக சூரிய மின்கலத்தில் இயங்கும் பாதுகாப்பு கெமராக்களை பொருத்தவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

தொடருந்தில் சிக்குண்டு பல யானைகள் உயிரிழக்கின்றன. இதனை தடுக்கும் வகையிலேயே பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்ஓயா மற்றும் மின்னேரியா போன்ற அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளில் 24 மணிநேரமும் இந்த பாதுகாப்பு கெமராக்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில், தண்டவாளங்களுக்கு அருகில் யானைகளின் நடமாட்டம் குறித்து அநுராதபுரத்தில் உள்ள முக்கிய தொடருந்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

பின்னர், இந்த விடயம் குறித்து தொடருந்து சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம், யானைகள் தொடருந்தில் மோதி உயிரிழப்பதை கட்டுப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

யானைகளை பாதுகாப்பதற்காக 24 மணிநேர பாதுகாப்பு கெமரா யானைகளை பாதுகாப்பதற்காக சூரிய மின்கலத்தில் இயங்கும் பாதுகாப்பு கெமராக்களை பொருத்தவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடருந்தில் சிக்குண்டு பல யானைகள் உயிரிழக்கின்றன. இதனை தடுக்கும் வகையிலேயே பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்ஓயா மற்றும் மின்னேரியா போன்ற அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளில் 24 மணிநேரமும் இந்த பாதுகாப்பு கெமராக்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தண்டவாளங்களுக்கு அருகில் யானைகளின் நடமாட்டம் குறித்து அநுராதபுரத்தில் உள்ள முக்கிய தொடருந்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர், இந்த விடயம் குறித்து தொடருந்து சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், யானைகள் தொடருந்தில் மோதி உயிரிழப்பதை கட்டுப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement