• Aug 21 2025

யாழில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் 18 மருந்தகங்கள்; வடக்கை மட்டும் ஏன் புறக்கணிக்கிறீர்கள்? சுகாதார அமைச்சிடம் அர்ச்சுனா கேள்வி!

shanuja / Aug 20th 2025, 11:59 am
image

வட மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் 18 மருந்தகங்கள் பதிவுகளின்றியும், அனுமதிப்பத்திரங்களின்றியும் இயங்குவதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார். அவ்வாறிருப்பின்  இதனைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்வியெழுப்பியுள்ளார். 


நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற கேள்வி மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.  


இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், இவ்வாறு பதிவு செய்யப்படாத மருந்தகங்கள் நாடு முழுவதும் இயங்குகின்றன. எனவே இவற்றைத் தரப்படுத்துவதற்குரிய சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் 10 வருடங்களாக அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.


எனவே தற்போது இது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


யாழில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் 18 மருந்தகங்கள்; வடக்கை மட்டும் ஏன் புறக்கணிக்கிறீர்கள் சுகாதார அமைச்சிடம் அர்ச்சுனா கேள்வி வட மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் 18 மருந்தகங்கள் பதிவுகளின்றியும், அனுமதிப்பத்திரங்களின்றியும் இயங்குவதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார். அவ்வாறிருப்பின்  இதனைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற கேள்வி மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.  இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், இவ்வாறு பதிவு செய்யப்படாத மருந்தகங்கள் நாடு முழுவதும் இயங்குகின்றன. எனவே இவற்றைத் தரப்படுத்துவதற்குரிய சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் 10 வருடங்களாக அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.எனவே தற்போது இது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement