• May 12 2026

18 நீர்த்தேக்கங்கள் வான்பாய்வு – தாழ்நில மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

Chithra / May 11th 2026, 9:07 am
image

நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் மழைவீழ்ச்சியினால், நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 12 பிரதான நீர்த்தேக்கங்களும், 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.


நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.டி.பி.எஸ்.டி. ஹேரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.


அனுராதபுரம் மாவட்டத்தின் ராஜங்கனை, பதுளை மாவட்டத்தின் சொரபொர வாவி, கண்டி மாவட்டத்தின் வே மெடில்ல, தேவஹூவ மற்றும் நாலந்த நீர்த்தேக்கங்கள், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில, யோத எல மற்றும் வெஹெரகல, குருநாகல் மாவட்டத்தின் தெதுறு ஓயா, மொனராகலை மாவட்டத்தின் அலிகொடஆர ஆகிய பிரதான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருகின்றன.


ராஜங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், விநாடிக்கு 9,300 கன அடிக்கும் அதிகமான நீர் கலா ஓயாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.


அதேவேளை, சொரபொர நீர்த்தேக்கத்தின் 5 வான் கதவுகள் தலா 2 அடி வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 500 கன அடிக்கும் அதிகமான நீர் மஹாவலி கங்கைக்கு வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கண்டி மாவட்டத்தின் நாலந்த நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 1,000 கன அடிக்கும் அதிகமான நீரும், தேவஹூவ நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 1,300 கன அடிக்கும் அதிகமான நீரும் வெளியேற்றப்பட்டு வருகின்றன.


மேலும், லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டு, விநாடிக்கு 4,000 கன அடிக்கும் அதிகமான நீர் கிரிந்தி ஓயாவுக்கு வெளியேற்றப்படுகிறது.


வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் ஊடாக விநாடிக்கு 1,900 கன அடிக்கும் அதிகமான நீர் மாணிக்க கங்கைக்கு வெளியேற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு மேலாக, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் வழியாக விநாடிக்கு 2,800 கன அடிக்கும் அதிகமான நீரும், அலிகொடஆர நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் வழியாக விநாடிக்கு 500 கன அடிக்கும் அதிகமான நீரும் வெளியேற்றப்படுகின்றன.


இதேநேரம், அனுராதபுரத்தின் துருவில, பதுளையின் போம்புருஎல்ல, ஹம்பாந்தோட்டையின் தெபரவெவ, மொனராகலையின் சத்தாதிஸ்ஸ மற்றும் மாலின்பொத, வவுனியா மாவட்டத்தின் மயிலான்குளம் ஆகிய நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருகின்றன.


எதிர்வரும் நாட்களில் பெய்யக்கூடிய மழைவீழ்ச்சியின் அடிப்படையில் நீர் வெளியேற்றத்தின் அளவு மேலும் மாற்றமடையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதனால், நீர்த்தேக்கங்களைச் சுற்றியுள்ள மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள், நீர்ப்பாசன திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிடும் அறிவிப்புகள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

18 நீர்த்தேக்கங்கள் வான்பாய்வு – தாழ்நில மக்களுக்கு அவசர எச்சரிக்கை நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் மழைவீழ்ச்சியினால், நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 12 பிரதான நீர்த்தேக்கங்களும், 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.டி.பி.எஸ்.டி. ஹேரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.அனுராதபுரம் மாவட்டத்தின் ராஜங்கனை, பதுளை மாவட்டத்தின் சொரபொர வாவி, கண்டி மாவட்டத்தின் வே மெடில்ல, தேவஹூவ மற்றும் நாலந்த நீர்த்தேக்கங்கள், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில, யோத எல மற்றும் வெஹெரகல, குருநாகல் மாவட்டத்தின் தெதுறு ஓயா, மொனராகலை மாவட்டத்தின் அலிகொடஆர ஆகிய பிரதான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருகின்றன.ராஜங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், விநாடிக்கு 9,300 கன அடிக்கும் அதிகமான நீர் கலா ஓயாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.அதேவேளை, சொரபொர நீர்த்தேக்கத்தின் 5 வான் கதவுகள் தலா 2 அடி வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 500 கன அடிக்கும் அதிகமான நீர் மஹாவலி கங்கைக்கு வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கண்டி மாவட்டத்தின் நாலந்த நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 1,000 கன அடிக்கும் அதிகமான நீரும், தேவஹூவ நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 1,300 கன அடிக்கும் அதிகமான நீரும் வெளியேற்றப்பட்டு வருகின்றன.மேலும், லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டு, விநாடிக்கு 4,000 கன அடிக்கும் அதிகமான நீர் கிரிந்தி ஓயாவுக்கு வெளியேற்றப்படுகிறது.வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் ஊடாக விநாடிக்கு 1,900 கன அடிக்கும் அதிகமான நீர் மாணிக்க கங்கைக்கு வெளியேற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு மேலாக, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் வழியாக விநாடிக்கு 2,800 கன அடிக்கும் அதிகமான நீரும், அலிகொடஆர நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் வழியாக விநாடிக்கு 500 கன அடிக்கும் அதிகமான நீரும் வெளியேற்றப்படுகின்றன.இதேநேரம், அனுராதபுரத்தின் துருவில, பதுளையின் போம்புருஎல்ல, ஹம்பாந்தோட்டையின் தெபரவெவ, மொனராகலையின் சத்தாதிஸ்ஸ மற்றும் மாலின்பொத, வவுனியா மாவட்டத்தின் மயிலான்குளம் ஆகிய நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருகின்றன.எதிர்வரும் நாட்களில் பெய்யக்கூடிய மழைவீழ்ச்சியின் அடிப்படையில் நீர் வெளியேற்றத்தின் அளவு மேலும் மாற்றமடையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதனால், நீர்த்தேக்கங்களைச் சுற்றியுள்ள மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள், நீர்ப்பாசன திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிடும் அறிவிப்புகள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement