• Oct 29 2026

13 நாடுகளில் தலைமறைவாக உள்ள 112 பேர்! குவிக்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்கள்! இலங்கை பொலிஸார் பரபரப்புத் தகவல்!

Chithra / Oct 29th 2026, 3:18 pm
image


சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 112 சந்தேகநபர்கள் 13 நாடுகளில் தலைமறைவாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.


'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள குறித்த சந்தேகநபர்களை 2027ஆம் ஆண்டிற்குள் நாட்டிற்கு அழைத்து வர முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் பின்னர் அவர்களுக்கு எதிராகச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் மூலம் குறித்த சந்தேகநபர்கள் பெருமளவிலான சட்டவிரோத வருமானத்தை ஈட்டி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அவ்வாறு சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் பொலிஸாரின் இரண்டு விசேட பிரிவுகள் 24 மணிநேரமும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அதன்படி, 2024ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும், 2025ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும், 2026ஆம் ஆண்டில் நேற்றைய தினம் வரை 1,656 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளிலும் 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியிலும் பொலிஸாரால் பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, 107.942 பில்லியன் ரூபாய் பெறுமதியான 4,483 கிலோகிராம் ஹெரோயின், 121.64 பில்லியன் ரூபாய் பெறுமதியான 7,129 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 5.293 பில்லியன் ரூபாய் பெறுமதியான 33,277 கிலோகிராம் கஞ்சாவும், 14.306 பில்லியன் ரூபாய் பெறுமதியான 333 கிலோகிராம் கொக்கைனும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

13 நாடுகளில் தலைமறைவாக உள்ள 112 பேர் குவிக்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்கள் இலங்கை பொலிஸார் பரபரப்புத் தகவல் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 112 சந்தேகநபர்கள் 13 நாடுகளில் தலைமறைவாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள குறித்த சந்தேகநபர்களை 2027ஆம் ஆண்டிற்குள் நாட்டிற்கு அழைத்து வர முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன் பின்னர் அவர்களுக்கு எதிராகச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் மூலம் குறித்த சந்தேகநபர்கள் பெருமளவிலான சட்டவிரோத வருமானத்தை ஈட்டி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.அவ்வாறு சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் பொலிஸாரின் இரண்டு விசேட பிரிவுகள் 24 மணிநேரமும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதன்படி, 2024ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும், 2025ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும், 2026ஆம் ஆண்டில் நேற்றைய தினம் வரை 1,656 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளிலும் 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியிலும் பொலிஸாரால் பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 107.942 பில்லியன் ரூபாய் பெறுமதியான 4,483 கிலோகிராம் ஹெரோயின், 121.64 பில்லியன் ரூபாய் பெறுமதியான 7,129 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 5.293 பில்லியன் ரூபாய் பெறுமதியான 33,277 கிலோகிராம் கஞ்சாவும், 14.306 பில்லியன் ரூபாய் பெறுமதியான 333 கிலோகிராம் கொக்கைனும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement