• May 16 2025

பொலிஸாரின் திடீர் பரிசோதனையில் சிக்கிய 11 பேருந்துகள்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

Bus
Chithra / May 16th 2025, 11:27 am
image


பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளை பரிசோதிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள், இன்று (15) கினிகத்தேன பொலிஸாரால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 

ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் உள்ள கினிகத்தேனவின் அம்பகமுவ பகுதியில் நீண்ட தூர சேவை பேருந்துகளின் பரிசோதனை நடைபெற்றது. 

இந்த நடவடிக்கையின் போது, பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குறைபாடுகளுடன் இயக்கப்பட்ட ஐந்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள், ஆறு தனியார் பேருந்துகள் உட்பட 11 சாரதிகள் மீது ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் சில பேருந்து சாரதிகளுக்கு குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவுகள் வழங்கப்பட்டன. 

இந்த பேருந்து பரிசோதனையின் போது, பயணிகளை விழிப்புணர்வு செய்யும் வகையில், பேருந்து சாரதிகள் போக்குவரத்து விதிகளை மீறுவது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

பொலிஸாரின் திடீர் பரிசோதனையில் சிக்கிய 11 பேருந்துகள் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளை பரிசோதிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள், இன்று (15) கினிகத்தேன பொலிஸாரால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் உள்ள கினிகத்தேனவின் அம்பகமுவ பகுதியில் நீண்ட தூர சேவை பேருந்துகளின் பரிசோதனை நடைபெற்றது. இந்த நடவடிக்கையின் போது, பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குறைபாடுகளுடன் இயக்கப்பட்ட ஐந்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள், ஆறு தனியார் பேருந்துகள் உட்பட 11 சாரதிகள் மீது ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில பேருந்து சாரதிகளுக்கு குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்த பேருந்து பரிசோதனையின் போது, பயணிகளை விழிப்புணர்வு செய்யும் வகையில், பேருந்து சாரதிகள் போக்குவரத்து விதிகளை மீறுவது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement