• May 22 2025

மே தின பாதுகாப்பில் 10 ஆயிரம் பொலிஸார்! - தயார் நிலையில் முப்படையினர்..!

Chithra / May 1st 2024, 8:56 am
image

 

மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்கள் காரணமாக கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்களை பேரணிகளுக்காக அழைத்து வரும் ஒழுக்கமற்ற பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் வீதியில் பயணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், அந்தந்த முகாம்களில் கிட்டத்தட்ட 1,600 வீரர்களை தயார் நிலையில் வைக்க முப்படைகளின் தலைவர்கள் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

மே தின பாதுகாப்பில் 10 ஆயிரம் பொலிஸார் - தயார் நிலையில் முப்படையினர்.  மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்கள் காரணமாக கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.இதேவேளை, மக்களை பேரணிகளுக்காக அழைத்து வரும் ஒழுக்கமற்ற பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் வீதியில் பயணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.மேலும், அந்தந்த முகாம்களில் கிட்டத்தட்ட 1,600 வீரர்களை தயார் நிலையில் வைக்க முப்படைகளின் தலைவர்கள் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now