• Oct 27 2026

பலத்த காற்றினால் 100 வீடுகள் சேதம் – மன்னாரில் 150 பேர் அவசரமாக வெளியேற்றம்!

Chithra / Oct 26th 2026, 4:23 pm
image


நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக சிலாபம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் சுமார் 100 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், மன்னாரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 150 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.


சிலாபம், மஹாவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேற்கு இரணவில பகுதியில் வீசிய பலத்த காற்றினால் சுமார் 100 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மஹாவெவ பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.


பலத்த காற்றின் தாக்கத்தினால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்துள்ள நிலையில், பாதிப்புகளின் முழுமையான விபரங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.


இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சீதுவிநாயகர்புரம் மற்றும் கூராய் பகுதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.


வெள்ளநீர் காரணமாக அப்பகுதிகளுக்கான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வசிக்கும் 60 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.


தொடர்ச்சியான சீரற்ற வானிலையால் குடியிருப்புகள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பலத்த காற்றினால் 100 வீடுகள் சேதம் – மன்னாரில் 150 பேர் அவசரமாக வெளியேற்றம் நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக சிலாபம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் சுமார் 100 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், மன்னாரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 150 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.சிலாபம், மஹாவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேற்கு இரணவில பகுதியில் வீசிய பலத்த காற்றினால் சுமார் 100 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மஹாவெவ பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.பலத்த காற்றின் தாக்கத்தினால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்துள்ள நிலையில், பாதிப்புகளின் முழுமையான விபரங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சீதுவிநாயகர்புரம் மற்றும் கூராய் பகுதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.வெள்ளநீர் காரணமாக அப்பகுதிகளுக்கான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வசிக்கும் 60 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.தொடர்ச்சியான சீரற்ற வானிலையால் குடியிருப்புகள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement