நாட்டில் 05 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சப்ரகமுவ மாகாணத்திற்கும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று இரவு 11.00 மணி வரை இந்த அறிவித்தல் செல்லுபடியாகும்.
குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அந்தப் பிரதேசங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை ; 5 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை நாட்டில் 05 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சப்ரகமுவ மாகாணத்திற்கும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று இரவு 11.00 மணி வரை இந்த அறிவித்தல் செல்லுபடியாகும்.குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அந்தப் பிரதேசங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.