• May 08 2025

வேட்பாளரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த இளைஞன்; நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Chithra / May 7th 2025, 2:44 pm
image


உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. 

பொலன்னறுவை 28ஆவது மைல்கல் பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இளைஞனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான இளைஞன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொலன்னறுவை மாநகர சபையில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தின்போது வேட்பாளரின் வீட்டில் அவரது மனைவியும் பிள்ளைகளும் மாத்திரமே இருந்துள்ளனர்.

இதனையடுத்து பிரதேசவாசிகள் சிலர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறிருப்பினும், மோட்டார் சைக்கிள் மற்றும் அதற்கு அருகில் இருந்த பெறுமதியான பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த இளைஞன்; நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. பொலன்னறுவை 28ஆவது மைல்கல் பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இளைஞனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேக நபரான இளைஞன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொலன்னறுவை மாநகர சபையில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.இந்த சம்பவத்தின்போது வேட்பாளரின் வீட்டில் அவரது மனைவியும் பிள்ளைகளும் மாத்திரமே இருந்துள்ளனர்.இதனையடுத்து பிரதேசவாசிகள் சிலர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.எவ்வாறிருப்பினும், மோட்டார் சைக்கிள் மற்றும் அதற்கு அருகில் இருந்த பெறுமதியான பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement