• May 09 2026

யாழில் பாடசாலை மாணவர்களுக்கான இளம் சிவதொண்டர் வதிவிட பயிற்சிப் பட்டறை ஆரம்பம்...!samugammedia

Ziya / Dec 23rd 2023, 11:01 am
image

அகில இலங்கை சைவ மகா சபையால் வலிகாமம் மற்றும் தீவக கல்வி வலயங்களின் ஒத்துழைப்புடன் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் தரம் 8 மற்றும் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான இளம் சிவதொண்டர் வதிவிட பயிற்சி நெறி  இன்று(23) காலை அகில இலங்கை சைவ மகாசபையின் பொது செயலாளர் மருத்துவர் பரா.நந்தகுமார் தலைமையில் ஆரம்பமானது.

ஆரம்ப நிகழ்வாக சைவ மகா சபையின் கீதம் இசைக்கபட்டு சைவத்திற்கும் தமிழிற்குமாக  உயிர் நீத்த உறவுகளிற்கு அகவணக்கம் செலுத்தி நந்திக்  கொடியேற்றி பயிற்சி பட்டறை அங்குரார்ப்பணம் செய்துவைக்கபட்டது.

 2025 ஆண்டில் இந்த மாணவர்கள் மூலம்  பாடசாலை சிவதொண்டர் அணியை உருவாக்கி மாணவர்களை போதையற்ற நேர் சிந்தையுடைய ஆன்மீகம் சார் அறம்சார் எதிர்கால தலைமைத்துவ விருத்திக்கான பாடசாலை மட்ட செயற்பாடுகளில் மாணவர்களை பங்கெடுக்க வைப்பதே பயிற்சி பட்டறையின்  எதிர்பார்ப்பாகும்.

வளவாளர்களாக பல்துறை சார்ந்தோரும் கலந்து சிற்பிக்கவுள்ள நிலையில் ஆன்மீகம், சிவபூசை தலைமைத்துவம், வாழ்க்கை தேர்ச்சி, குழு செயற்பாடு, அனர்த்த முகாமை, சிவதொண்டர் அமைப்பு, சமய தீட்சை , பாதயாத்திரை ,இயக்கவியல் யோகாசனம், பண்ணிசை என பல்நோக்கில் ஆரம்ப பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இன்று ஆரம்பமான அங்குரார்ப்பண நிகழ்வில் அகில இலங்கை சைவமகாசபையின் பொது செயலாளர் பரா நந்தகுமார், தமிழ் சைவ பேரவையின் பொதுச் செயலாளர் சிவரூபன் , அகில இலங்கை சைவ மகா சபையின் பொருளாளர் அருள் சிவானந்தன், வலிகாமம் கல்வி வலயத்தின் ஆசிரியர் வள நிலைய பொறுப்பாசிரியரும் தெல்லிப்பழை துர்க்காதேவி அறநெறிப் பாடசாலையின் அதிபருமான விஜகுமாரி முருகேசம்பிள்ளை, வளவாளர்கள், மாணவர்கள் , சிவதொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ச்சியாக எதிர்வரும் திங்கட்கிழமை வரை பயிற்சி நெறி முன்னெடுக்கபட்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படவுள்ளது.




யாழில் பாடசாலை மாணவர்களுக்கான இளம் சிவதொண்டர் வதிவிட பயிற்சிப் பட்டறை ஆரம்பம்.samugammedia அகில இலங்கை சைவ மகா சபையால் வலிகாமம் மற்றும் தீவக கல்வி வலயங்களின் ஒத்துழைப்புடன் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் தரம் 8 மற்றும் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான இளம் சிவதொண்டர் வதிவிட பயிற்சி நெறி  இன்று(23) காலை அகில இலங்கை சைவ மகாசபையின் பொது செயலாளர் மருத்துவர் பரா.நந்தகுமார் தலைமையில் ஆரம்பமானது.ஆரம்ப நிகழ்வாக சைவ மகா சபையின் கீதம் இசைக்கபட்டு சைவத்திற்கும் தமிழிற்குமாக  உயிர் நீத்த உறவுகளிற்கு அகவணக்கம் செலுத்தி நந்திக்  கொடியேற்றி பயிற்சி பட்டறை அங்குரார்ப்பணம் செய்துவைக்கபட்டது. 2025 ஆண்டில் இந்த மாணவர்கள் மூலம்  பாடசாலை சிவதொண்டர் அணியை உருவாக்கி மாணவர்களை போதையற்ற நேர் சிந்தையுடைய ஆன்மீகம் சார் அறம்சார் எதிர்கால தலைமைத்துவ விருத்திக்கான பாடசாலை மட்ட செயற்பாடுகளில் மாணவர்களை பங்கெடுக்க வைப்பதே பயிற்சி பட்டறையின்  எதிர்பார்ப்பாகும்.வளவாளர்களாக பல்துறை சார்ந்தோரும் கலந்து சிற்பிக்கவுள்ள நிலையில் ஆன்மீகம், சிவபூசை தலைமைத்துவம், வாழ்க்கை தேர்ச்சி, குழு செயற்பாடு, அனர்த்த முகாமை, சிவதொண்டர் அமைப்பு, சமய தீட்சை , பாதயாத்திரை ,இயக்கவியல் யோகாசனம், பண்ணிசை என பல்நோக்கில் ஆரம்ப பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.இன்று ஆரம்பமான அங்குரார்ப்பண நிகழ்வில் அகில இலங்கை சைவமகாசபையின் பொது செயலாளர் பரா நந்தகுமார், தமிழ் சைவ பேரவையின் பொதுச் செயலாளர் சிவரூபன் , அகில இலங்கை சைவ மகா சபையின் பொருளாளர் அருள் சிவானந்தன், வலிகாமம் கல்வி வலயத்தின் ஆசிரியர் வள நிலைய பொறுப்பாசிரியரும் தெல்லிப்பழை துர்க்காதேவி அறநெறிப் பாடசாலையின் அதிபருமான விஜகுமாரி முருகேசம்பிள்ளை, வளவாளர்கள், மாணவர்கள் , சிவதொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.தொடர்ச்சியாக எதிர்வரும் திங்கட்கிழமை வரை பயிற்சி நெறி முன்னெடுக்கபட்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement