குருநாகல் – வெலகெதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகோட்டை பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறு ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூரிய ஆயுதம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த பெண், மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அம்பகோட்டை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணைகளில், குடும்பத் தகராறு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சந்தேகநபரான கணவர், கூரிய ஆயுதம் ஒன்றினால் மனைவியை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் 50 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
வெலகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குருநாகலில் குடும்பத் தகராறால் விபரீதம்: மனைவியை கொலை செய்த கணவர் கைது குருநாகல் – வெலகெதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகோட்டை பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறு ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கூரிய ஆயுதம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த பெண், மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் அம்பகோட்டை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.ஆரம்பகட்ட விசாரணைகளில், குடும்பத் தகராறு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சந்தேகநபரான கணவர், கூரிய ஆயுதம் ஒன்றினால் மனைவியை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பில் 50 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.