எமது நிலமீட்பு போராட்டம் பரவலாக விரிவடைந்து இன்று மன்னாரிலும் எமக்கான ஆதரவு போராட்டம் பரவிச் சென்றுள்ளது. இன்நிலையில் நாம் போராட்டத்தின் வடிவை மாற்றி அரச தரப்பு மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களையும் அரச திணைக்களங்களின் செயற்பாடுகளையும் முடக்கி எமக்கான தீர்வைக் கோரவுள்ளதாக மயிலிட்டி மீள் குடியேற்ற அபிவிருத்திக் குழு தெரிவுத்துள்ளது.
வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்களினால் பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் உள்ள இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக 16 ஆவது வெள்ளிக்கிழமையாகவும் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலி. வடக்கில் 248, 251, 246 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வகுக்கட்டயமாக வெளியேற்றப்பட்ட நிலையில், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் கோரிவரும் வரும் நிலையில் தற்போது கவனயீர்பு போராட்டமும் 16 ஆவது வாரத்தை எட்டியுள்ளது.
ஆனாலும் அரசோ, அரச அதிகாரிகளோ அதற்கான எந்தவொரு முயற்சியையும் இதுவரை முன்னெடுக்காது காணிகளை சுவீகரிக்கும் நோக்குடனேயே செயற்பட்டு வருகின்றது.
இத்தகையசூழலில் தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதென காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில்
இன்று 16 ஆவது வெள்ளிக்கிழமையும் காணி உரிமையாளர்களால் அமைதிவழியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.
வலிகள் வடக்கெங்கும் விரிவடைகின்றது - விரைவில் போராட்டத்தின் வடிவும் மாற்றப்படும் மயிலிட்டி மக்கள் ஆதங்கம் எமது நிலமீட்பு போராட்டம் பரவலாக விரிவடைந்து இன்று மன்னாரிலும் எமக்கான ஆதரவு போராட்டம் பரவிச் சென்றுள்ளது. இன்நிலையில் நாம் போராட்டத்தின் வடிவை மாற்றி அரச தரப்பு மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களையும் அரச திணைக்களங்களின் செயற்பாடுகளையும் முடக்கி எமக்கான தீர்வைக் கோரவுள்ளதாக மயிலிட்டி மீள் குடியேற்ற அபிவிருத்திக் குழு தெரிவுத்துள்ளது. வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்களினால் பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் உள்ள இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக 16 ஆவது வெள்ளிக்கிழமையாகவும் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.வலி. வடக்கில் 248, 251, 246 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வகுக்கட்டயமாக வெளியேற்றப்பட்ட நிலையில், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனாலும் யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் கோரிவரும் வரும் நிலையில் தற்போது கவனயீர்பு போராட்டமும் 16 ஆவது வாரத்தை எட்டியுள்ளது.ஆனாலும் அரசோ, அரச அதிகாரிகளோ அதற்கான எந்தவொரு முயற்சியையும் இதுவரை முன்னெடுக்காது காணிகளை சுவீகரிக்கும் நோக்குடனேயே செயற்பட்டு வருகின்றது.இத்தகையசூழலில் தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதென காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில்இன்று 16 ஆவது வெள்ளிக்கிழமையும் காணி உரிமையாளர்களால் அமைதிவழியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.