யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள கழிவுகளை மீள அள்ளிச் செல்லாமல், அவற்றை மேலும் பள்ளங்களுக்குள் தள்ளிவிட முயன்ற வலி. தெற்கு பிரதேச சபையினரை வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் முன்னதாக சுண்ணக்கல் அகழ்வுக்காக உருவாக்கப்பட்ட பாரிய பள்ளங்களில் வலி. தெற்கு பிரதேச சபையினரால் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் கொட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைக்கு வலி. வடக்கு பிரதேச சபையினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், வடமாகாண ஆளுநர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, மாவட்ட செயலாளர் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
அத்துடன், ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள கழிவுகளை வலி. தெற்கு பிரதேச சபையினர் மீள அள்ளிச் சென்று உரிய முறையில் அகற்ற வேண்டும் என்றும் வலி. வடக்கு பிரதேச சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (07) வலி. தெற்கு பிரதேச சபையினர் கடற்படையினரின் உதவியுடன் கனரக வாகனங்களில் கீரிமலை பகுதிக்கு சென்றுள்ளனர்.
அங்கு ஏற்கனவே கொட்டப்பட்டிருந்த கழிவுகளை மீள அள்ளிச் செல்வதற்குப் பதிலாக, அவற்றை குறித்த பாரிய பள்ளங்களுக்குள் மேலும் தள்ளிவிட முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று குறித்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கொட்டப்பட்டுள்ள கழிவுகளை மீள அள்ளிச் சென்று அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, அவற்றை மேலும் பள்ளங்களுக்குள் தள்ளுவது ஏற்றுக்கொள்ள முடியாது என வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வலி. தெற்கு பிரதேச சபையினரை அங்கிருந்து திருப்பி அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சம்பவம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினருக்கும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ளனர்.
கீரிமலை பகுதியில் பல்வேறு வகையான கழிவுகள் கொட்டப்படுவது சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், உரிய அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளத்துக்குள் தள்ள முயற்சி – வலி. தெற்கு பிரதேச சபையினரை தடுத்து நிறுத்திய வலி. வடக்கு உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள கழிவுகளை மீள அள்ளிச் செல்லாமல், அவற்றை மேலும் பள்ளங்களுக்குள் தள்ளிவிட முயன்ற வலி. தெற்கு பிரதேச சபையினரை வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் முன்னதாக சுண்ணக்கல் அகழ்வுக்காக உருவாக்கப்பட்ட பாரிய பள்ளங்களில் வலி. தெற்கு பிரதேச சபையினரால் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் கொட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நடவடிக்கைக்கு வலி. வடக்கு பிரதேச சபையினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், வடமாகாண ஆளுநர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, மாவட்ட செயலாளர் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.அத்துடன், ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள கழிவுகளை வலி. தெற்கு பிரதேச சபையினர் மீள அள்ளிச் சென்று உரிய முறையில் அகற்ற வேண்டும் என்றும் வலி. வடக்கு பிரதேச சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (07) வலி. தெற்கு பிரதேச சபையினர் கடற்படையினரின் உதவியுடன் கனரக வாகனங்களில் கீரிமலை பகுதிக்கு சென்றுள்ளனர்.அங்கு ஏற்கனவே கொட்டப்பட்டிருந்த கழிவுகளை மீள அள்ளிச் செல்வதற்குப் பதிலாக, அவற்றை குறித்த பாரிய பள்ளங்களுக்குள் மேலும் தள்ளிவிட முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்து தகவல் அறிந்த வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று குறித்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.கொட்டப்பட்டுள்ள கழிவுகளை மீள அள்ளிச் சென்று அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, அவற்றை மேலும் பள்ளங்களுக்குள் தள்ளுவது ஏற்றுக்கொள்ள முடியாது என வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து, வலி. தெற்கு பிரதேச சபையினரை அங்கிருந்து திருப்பி அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், சம்பவம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினருக்கும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ளனர்.கீரிமலை பகுதியில் பல்வேறு வகையான கழிவுகள் கொட்டப்படுவது சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், உரிய அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.