• May 25 2026

மாரடைப்பால் இளம் சட்டத்தரணி மரணம்; வடமராட்சியில் பெரும் சோகம்

Chithra / Mar 18th 2026, 11:07 am
image


மாரடைப்பினால் இளம் குடும்பஸ்தரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று இரவு அவர் இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது. 


யாழ்ப்பாணம் -  வடமராட்சி, அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தையும் வட இந்து மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியரை விஸ்வர்யாவின் கணவரும் சட்டத்தரணியுமான 40 வயதுடைய சிவராசா நிகாஷ்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


நேற்று செவ்வாய்க்கிழமை தனது பணி முடித்து மாலை 5 மணியளவில் வீடு திரும்பிய போது நெஞ்சுக்குள் ஒரு மாதிரியாக இருப்பதாக மனைவியிடம் கூற, மனைவி தேநீர் வழங்கியுள்ளார். 


பின்னர், இரவு 7 மணியளவில் உடல்நலக் குறைவினால் நெல்லியடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 


குறித்த இளவயது மரணம் அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாரடைப்பால் இளம் சட்டத்தரணி மரணம்; வடமராட்சியில் பெரும் சோகம் மாரடைப்பினால் இளம் குடும்பஸ்தரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நேற்று இரவு அவர் இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் -  வடமராட்சி, அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தையும் வட இந்து மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியரை விஸ்வர்யாவின் கணவரும் சட்டத்தரணியுமான 40 வயதுடைய சிவராசா நிகாஷ்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்று செவ்வாய்க்கிழமை தனது பணி முடித்து மாலை 5 மணியளவில் வீடு திரும்பிய போது நெஞ்சுக்குள் ஒரு மாதிரியாக இருப்பதாக மனைவியிடம் கூற, மனைவி தேநீர் வழங்கியுள்ளார். பின்னர், இரவு 7 மணியளவில் உடல்நலக் குறைவினால் நெல்லியடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த இளவயது மரணம் அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement