நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த இளைஞர்கள், நீர்வீழ்ச்சிக்கு அருகே ஒன்றுகூடி நடத்திய விருந்துபசார நிகழ்வு பொலிஸாரின் சுற்றிவளைப்பில் முடிவடைந்துள்ளது.
நாவலப்பிட்டி – சமனலகம பகுதியில் அமைந்துள்ள சுதுகல நீர்வீழ்ச்சிக்கு அருகேயுள்ள வாடகை அறைகளிலேயே இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாவலப்பிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த விருந்தை ஏற்பாடு செய்துள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த இரண்டு அறைகளில் தங்கியிருந்த 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், கட்டுநாயக்க, தியசென்புர, நீர்கொழும்பு மற்றும் மெதிரிகிரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 490 மில்லிகிராம் ஹஷீஷ், 140 மில்லிகிராம் ஐஸ், 320 மில்லிகிராம் கொக்கேன், ஹஷீஷ் சுருட்டுகள் மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நீர்வீழ்ச்சிக்கு அருகே நடந்த மர்ம விருந்து; பொலிஸாரிடம் சிக்கிய இளைஞர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த இளைஞர்கள், நீர்வீழ்ச்சிக்கு அருகே ஒன்றுகூடி நடத்திய விருந்துபசார நிகழ்வு பொலிஸாரின் சுற்றிவளைப்பில் முடிவடைந்துள்ளது.நாவலப்பிட்டி – சமனலகம பகுதியில் அமைந்துள்ள சுதுகல நீர்வீழ்ச்சிக்கு அருகேயுள்ள வாடகை அறைகளிலேயே இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நாவலப்பிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த விருந்தை ஏற்பாடு செய்துள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது, வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த இரண்டு அறைகளில் தங்கியிருந்த 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதானவர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், கட்டுநாயக்க, தியசென்புர, நீர்கொழும்பு மற்றும் மெதிரிகிரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களிடமிருந்து 490 மில்லிகிராம் ஹஷீஷ், 140 மில்லிகிராம் ஐஸ், 320 மில்லிகிராம் கொக்கேன், ஹஷீஷ் சுருட்டுகள் மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.இந்தச் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.