எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இழப்பீடு திறைசேரியின் செயலாளருக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவுக்கு பொறுப்பான அப்போதைய அமைச்சர் நாலக்க கொடஹேவா, இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சேதங்களுக்காக பேராயர் கரத்தினால் மெல்கம் ரஞ்சித் உட்பட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்கள் தொடர்பில், தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து; இழப்பீடாக 1 பில்லியன் டொலர் வழங்க உத்தரவு எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இழப்பீடு திறைசேரியின் செயலாளருக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவுக்கு பொறுப்பான அப்போதைய அமைச்சர் நாலக்க கொடஹேவா, இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சேதங்களுக்காக பேராயர் கரத்தினால் மெல்கம் ரஞ்சித் உட்பட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்கள் தொடர்பில், தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.