எரிபொருள் விலையை குறைக்கும் நோக்கில், புதிய நடவடிக்கை ஒன்றை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, எரிபொருள் விநியோகத்துக்கு பயன்படுத்தப்படும் பவுசர்களின் உதிரிப் பாகங்கள் மற்றும் பிற பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதன் மூலம் மொத்த செலவுகளை அடக்குவது திட்டமிடப்பட்டுள்ளது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விநியோகஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளதுடன், செலவைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அவர்கள் சம்மதம் வழங்கியுள்ளனர்.
இந்த நடவடிக்கையால் எரிபொருள் விநியோகச் சங்கிலியில் செலவுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நேரடி பலன்கள் நுகர்வோருக்குப் பெரிதும் பயனளிக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
எரிபொருள் விலையை குறைக்க புதிய யோசனை எரிபொருள் விலையை குறைக்கும் நோக்கில், புதிய நடவடிக்கை ஒன்றை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, எரிபொருள் விநியோகத்துக்கு பயன்படுத்தப்படும் பவுசர்களின் உதிரிப் பாகங்கள் மற்றும் பிற பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதன் மூலம் மொத்த செலவுகளை அடக்குவது திட்டமிடப்பட்டுள்ளது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக விநியோகஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளதுடன், செலவைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அவர்கள் சம்மதம் வழங்கியுள்ளனர்.இந்த நடவடிக்கையால் எரிபொருள் விநியோகச் சங்கிலியில் செலவுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நேரடி பலன்கள் நுகர்வோருக்குப் பெரிதும் பயனளிக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.