TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரே நேரத்தில் பெருமளவிலான மக்கள் இணையத்தளத்தை நாடியதால், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையச் சேவையில் திடீர் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் பொதுமக்கள் பலரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஆனால், முறைமை முழுமையாக முடங்கிவிட்டதாக வெளியாகும் தகவல்களை உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ நிராகரித்துள்ளார்.
ஒன்லைன் முறைமை முழுமையாக முடங்கவில்லை என்றும், அதிகளவிலான பயனாளர்கள் ஒரே நேரத்தில் அணுக முயற்சித்ததால் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அதிகளவிலான மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதும் முறைமைக்கு மேலதிக சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தங்களால் தொடர்ந்தும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணைய முறைமைக்குள் பிரவேசிக்க முடியவில்லை எனப் பொதுமக்கள் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தத் தொழில்நுட்பப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், முறைமை படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருவதாகவும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
TIN இலக்கத்தைப் பெறுவதில் சிக்கல் முடங்கியதா இறைவரித் திணைக்கள இணையத்தளம் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரே நேரத்தில் பெருமளவிலான மக்கள் இணையத்தளத்தை நாடியதால், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையச் சேவையில் திடீர் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.இதனால் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் பொதுமக்கள் பலரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.ஆனால், முறைமை முழுமையாக முடங்கிவிட்டதாக வெளியாகும் தகவல்களை உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ நிராகரித்துள்ளார்.ஒன்லைன் முறைமை முழுமையாக முடங்கவில்லை என்றும், அதிகளவிலான பயனாளர்கள் ஒரே நேரத்தில் அணுக முயற்சித்ததால் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அதிகளவிலான மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதும் முறைமைக்கு மேலதிக சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, தங்களால் தொடர்ந்தும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணைய முறைமைக்குள் பிரவேசிக்க முடியவில்லை எனப் பொதுமக்கள் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.இந்தத் தொழில்நுட்பப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், முறைமை படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருவதாகவும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.