2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று (05) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பங்குதாரர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீர்த்தேக்கங்களில் தற்போது காணப்படும் நீர்மட்டம் மற்றும் எல் நினோ (El Niño) வானிலை நிலைமைகளின் கீழ் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவான மழைவீழ்ச்சி கிடைத்துள்ளமை ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2026 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மின்சாரப் பாவனையாளர்களுக்கு நிம்மதி கிடைக்குமா வெளியான அறிவிப்பு என்ன 2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.இன்று (05) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பங்குதாரர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.நீர்த்தேக்கங்களில் தற்போது காணப்படும் நீர்மட்டம் மற்றும் எல் நினோ (El Niño) வானிலை நிலைமைகளின் கீழ் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவான மழைவீழ்ச்சி கிடைத்துள்ளமை ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கமைய, 2026 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.