• Aug 14 2025

கிளிநொச்சி கனகபுரம் பாடசாலை வீதி காபற் வீதியாக புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

shanuja / Aug 14th 2025, 5:07 pm
image

கிளிநொச்சி கனகபுரம் பாடசாலை வீதியை காபற் வீதியாகப் புனரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. 


போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் உள்ளூர் வீதிகள் புனரமைப்பின் இரண்டாம் கட்டத்தின் கீழ்  குறித்த வீதி புனரமைக்கப்படவுள்ளது. 


805மீற்றர் நீளமான குறித்த வீதி காப்பற் வீதியாக 45மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது.  குறித்த வீதி புனரமைப்பு பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் கருணாந்தன் இளங்குமரன் ஆரம்பித்து வைத்தார். 


நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சு.முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர் ,கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள்,  கடற்றொழில் அமைச்சரின் கிளிநொச்சி மாவட்ட இணைப்புச்செயலாளர் ,திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் ,பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி கனகபுரம் பாடசாலை வீதி காபற் வீதியாக புனரமைக்கும் பணிகள் ஆரம்பம் கிளிநொச்சி கனகபுரம் பாடசாலை வீதியை காபற் வீதியாகப் புனரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் உள்ளூர் வீதிகள் புனரமைப்பின் இரண்டாம் கட்டத்தின் கீழ்  குறித்த வீதி புனரமைக்கப்படவுள்ளது. 805மீற்றர் நீளமான குறித்த வீதி காப்பற் வீதியாக 45மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது.  குறித்த வீதி புனரமைப்பு பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் கருணாந்தன் இளங்குமரன் ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சு.முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர் ,கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள்,  கடற்றொழில் அமைச்சரின் கிளிநொச்சி மாவட்ட இணைப்புச்செயலாளர் ,திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் ,பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement