ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயிலில் ஏற முயன்ற பெண்ணொருவர் தவறி கீழே விழுந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
பங்குரா ரயில் நிலையத்தில் ரயிலுக்காக பெண் ஒருவர் காத்துக் கொண்டிருந்தார். அப்போது ரயில் நிலையத்தை ரயில் வந்தடைந்தது.
ரயில் சிறிது நேரத்தின் பின்னர் புறப்பட்ட போதே குறித்த பெண் ரயிலில் ஏற முயன்றுள்ளார்.
ஓடும் ரயிலில் 60 வயது மதிக்கத்தக்க குறித்த பெண் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதனை அவதானித்த ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் உடனடியாக ஓடிச் சென்று அப்பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.
இந்தச் சம்பவம் ரயில்வே நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை விரைந்து செயற்பட்டு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பலரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்; கணப்பொழுதில் ஓடிச் சென்று காப்பாற்றிய பொலிஸார் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயிலில் ஏற முயன்ற பெண்ணொருவர் தவறி கீழே விழுந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. பங்குரா ரயில் நிலையத்தில் ரயிலுக்காக பெண் ஒருவர் காத்துக் கொண்டிருந்தார். அப்போது ரயில் நிலையத்தை ரயில் வந்தடைந்தது. ரயில் சிறிது நேரத்தின் பின்னர் புறப்பட்ட போதே குறித்த பெண் ரயிலில் ஏற முயன்றுள்ளார். ஓடும் ரயிலில் 60 வயது மதிக்கத்தக்க குறித்த பெண் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை அவதானித்த ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் உடனடியாக ஓடிச் சென்று அப்பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். இந்தச் சம்பவம் ரயில்வே நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை விரைந்து செயற்பட்டு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பலரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.