• Apr 17 2026

மீண்டும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமா? வெளியான முக்கிய அறிவிப்பு

Chithra / Apr 16th 2026, 10:44 am
image

நிலவும் வறட்சியை கருத்திற்கொண்டு, மீண்டும் திட்டமிட்ட ரீதியிலான நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது குறித்து எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு பின்னரே தீர்மானிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.


இதுவரை அவ்வாறான தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என அச்சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


நாட்டில் நிலவும் வரட்சியான வானிலை காரணமாக, சபையிடம் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட நீர் கொள்ளளவை முகாமைத்துவம் செய்யும் நோக்கில், கடந்த 2 ஆம் திகதி முதல் தொகுதி வாரியாக நீர்வெட்டு ஆரம்பிக்கப்பட்டது.


இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம, பாதுக்க உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டம் கட்டமாக நீர்வெட்டு முன்னெடுக்கப்பட்டது.


எனினும், சித்திரை புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் நோக்கில், கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் இந்த நீர்வெட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.


இருப்பினும், பண்டிகைக் காலத்தின் பின்னர் நிலவும் வானிலை மற்றும் நீரின் கையிருப்பு என்பவற்றை மீளாய்வு செய்த பின்னரே, அடுத்தகட்ட நீர் விநியோகம் தொடர்பான உத்தியோகபூர்வ தீர்மானம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமா வெளியான முக்கிய அறிவிப்பு நிலவும் வறட்சியை கருத்திற்கொண்டு, மீண்டும் திட்டமிட்ட ரீதியிலான நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது குறித்து எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு பின்னரே தீர்மானிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.இதுவரை அவ்வாறான தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என அச்சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.நாட்டில் நிலவும் வரட்சியான வானிலை காரணமாக, சபையிடம் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட நீர் கொள்ளளவை முகாமைத்துவம் செய்யும் நோக்கில், கடந்த 2 ஆம் திகதி முதல் தொகுதி வாரியாக நீர்வெட்டு ஆரம்பிக்கப்பட்டது.இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம, பாதுக்க உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டம் கட்டமாக நீர்வெட்டு முன்னெடுக்கப்பட்டது.எனினும், சித்திரை புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் நோக்கில், கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் இந்த நீர்வெட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.இருப்பினும், பண்டிகைக் காலத்தின் பின்னர் நிலவும் வானிலை மற்றும் நீரின் கையிருப்பு என்பவற்றை மீளாய்வு செய்த பின்னரே, அடுத்தகட்ட நீர் விநியோகம் தொடர்பான உத்தியோகபூர்வ தீர்மானம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement